தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் த. வெ. க நிர்வாகி ஒருவர் கட்டிய புதிய திருமண மண்டப விழா நடைபெற்றது. இதில் தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தார். தொடர்ந்து சிலம்பம் போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைத்த மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார். மேலும் விழாவிற்கு வந்திருந்த சிறுவர்கள், பெண்கள், பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் அமைச்சர் ஸ்ரீநாத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களின் செல்போன்களை வாங்கி அமைச்சர் ஸ்ரீநாத்தை செல்பி எடுத்து மகிழ்ச்சியடைந்தார்.
இதனை தொடர்ந்து அவர் பேசுகையில், மருத்துவமனை, திருமண மண்டபம், பள்ளி கட்டிடம் கட்டுவது என்பது ஒரு தெய்வாதிக செயல், எத்தனையோ புனிதமான விஷயங்கள், சுப காரியங்கள் இந்த மண்டபத்தில் நடக்க போகிறது. இந்த மண்டபத்தை பார்க்கும்போது என்னுடைய திருமணம் நடைபெற்ற J. S. கல்யாண மண்டபம் தான் ஞாபகம் வருகிறது.

நான் இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்க காரணம் என்னுடைய நண்பர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தான். அவரால் தான் இந்த நிலைமையில் இருக்கிறேன். என்னுடைய திருமணமும் அந்த மண்டபத்தில் தான் நடைபெற வேண்டும் என்றும் அவர் ஆசைப்பட்டார். அதையும் மண்டபத்தில்தான் என்னுடைய திருமண நடைபெற்றது. அதேபோன்றுதான் இந்த மண்டபமும் உள்ளது. இதில் நிறைய சுப காரியங்கள் நடக்க வேண்டும். தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் இன்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் தமிழக வெற்றிக்க கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.