ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களால் 25 சதவீத தீப்பெட்டி உற்பத்தி பாதிப்பு ஏற்படுவதாகவும், பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனத் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிட உள்ளோம் என தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் விஜய் ஆனந்த்  செய்தியாளர்களிடம் பேசுகையில், தீப்பெட்டி தொழில் ஆரம்பித்து நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. 1923-ல் தீப்பெட்டி தொழில் சிவகாசியில் தொடங்கப்பட்டு, இன்னைக்கு தென் தமிழ்நாடு, குடியாத்தம், காவேரிப்பட்டினம் அனைத்து ஐந்து மாவட்டங்களிலும் பிரதான தொழிலாக உள்ளது. இதில் 80 சதவீதம்  பெண் தொழிலாளர்களே வேலை பார்க்கின்றார்கள். தீப்பெட்டி தொழிலுக்கு பெரும் சவாலாக உள்ளது வந்து ‘ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர்ஸ்’. இது அதிகளாவில் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.

முதலில் ₹20-க்கு கீழ் உள்ள தடையை மத்திய அரசு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்திருந்தார்கள்.  ஆனால் பிளாஸ்டிக் லைட்டருக்கு தேவையான மூலப்பொருள்களை இந்தியாவிற்கு வரவைத்து தரமில்லாத பிளாஸ்டிக் லைட்டர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர். இதனால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டரால்  அரசுக்கு GST வரியும் கிடைக்கவில்லை; அந்நிய செலாவணியும் கிடைக்கவில்லை. ஆனால் தீப்பெட்டி 400 கோடி ரூபாய் வரைக்கும் ஏற்றுமதி (Export) செய்யப்பட்டு வருகிறது.

இப்போது 400 கோடியில் உள்ள ஏற்றுமதி  600 கோடியாக ஆவதற்கும் இப்போது வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. ஆனால் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர்ஸ் காரணமாக தொழிலுக்கு பாதிப்பு வருவதனால் தான் தீப்பெட்டி தொழில் முன்னேற்றமடைய முடியாமல் உள்ளது. ஆகவே நாங்கள் நமது  தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, தீப்பெட்டி தொழிலைப் பாதுகாக்க 'ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர்ஸ்'-ஐ தமிழ்நாட்டில் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு (Usage) மூன்றையும் தடை செய்யக் கோரி மனு கொடுக்கலாம் என்று நாங்கள் முடிவெடுத்துள்ளோம். தீப்பெட்டி தொழில் பாதுகாப்பதற்கு தமிழ்நாடு அரசு  முயற்சி மேற்கொண்டால்  தீப்பெட்டி உற்பத்தி உயர்வது மட்டுமின்றி, தீப்பெட்டி தொழில் மற்றும் வேலை வாய்ப்பினை பாதுகாக்க முடியும். எனவே தமிழக முதல்வரை சந்தித்து முறையிட உள்ளோம் எனத் தெரிவித்தார். 

பேட்டியின் போது சங்கத்தின் செயலாளர் வரதராஜன், பொருளாளர் ராஜவேல், நிர்வாக குழு உறுப்பினர் லிபர்டி அம்புரோஸ், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சேதுரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”