கோவில்பட்டி:

சட்டமன்றத்தை கூட்டும் போது உனக்கு(விஜய்) எலும்பு இருக்காது, உடைத்து விட்டு தான்..., சட்டமன்றத்தை கூட்டிப் பார் எனப் பேசியதால் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் திமுக பொதுக்கூட்டத்தில்  சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேச்சு:

 இவ்வளவு கேவலமான முதல்வரை (விஐய்) தமிழக மட்டுமல்ல, இந்திய வரலாறே பெற்றது கிடையாது..இனி வரும் தேர்தல்களில் 5% வாக்குகள் கூட பெற முடியாமல் விஜய் மற்றும் அவருடைய கட்சி தோற்றுப் போகும். பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர்  தேர்தலில் தோற்றபோது  அப்போது இருந்த தலைவர்கள் நாகரீகமாக பேசினார்கள் . ஆனால் இந்த உலகத்தில் நாட்டில் சட்டமன்றத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன் உன் தகப்பனாரை என்று  சொல்கிறானே (விஜய்), நான் கேட்கிறேன்.

 மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர் (விஜய்), உன்னை சட்டமன்றத்திற்குள் வைத்துப் பார்த்துக் கொள்கிறோம் . நாங்கள் என்ன கோமாளி பயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?. சட்டமன்றத்தை கூட்டும் போது உனக்கு (விஜய்) எலும்பு இருக்காது, உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம், சட்டமன்றத்தை கூட்டிப் பார். 

யார் ஓடியது? கைது செய்து விடுவார்கள் என்று இரவோடு இரவாக கேராவனில்  யாரை வைத்துக்கொண்டு  நீ ஓடினாய் கரூரில் இருந்து. நாங்க ஒன்னும் பயந்து ஓடல, பேய் அடிச்சது போல சட்டமன்றத்தில் உட்கார்ந்திருந்தார் தமிழ்நாட்டின் முதலமைச்சர். கொத்து புரோட்டா போட போறாராம், உன்னை போல ஆயிரக்கணக்கான பரோட்டா கடைகளை நாங்க பார்த்திருக்கிறோம். நீ எவ்வளவு கேவலமாக பேசின.. விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்தது திமுக. விளாத்திகுளம் வேடநத்தத்தில்  சுயநினைவு இல்லாத ஒருத்தனால் கற்பழிக்கப்பட்டு இறந்துவிட்டாள்.  அதன் எதிரொலித்ததால் எங்களுடைய அமைச்சர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

 இன்றைக்கு தமிழகத்தில்  அந்த அன்பு மகளை போன்று, மூன்று வயது குழந்தை முதல் 95 வயது பாட்டி வரை உன்னுடைய ஆட்சியில் யாரும் சுதந்திரமாக நடக்க முடியவில்லை. அரசு ஊழியர்கள் உங்கள் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை விஜய் ஆட்சியில் வேண்டாம் என்று சொல்லி விடுங்கள். பாதுகாப்பில்லாமல் கொலை செய்ததற்கு அங்கங்கே  விஜய் கட்சிக்காரன் ரெடியாகி விட்டான். வழக்கு போடுவேன், மிரட்டுவேன், எம்எல்ஏ விலைபேசுவேன்,  என்கிறான். மானங்கெட்ட பையன் தகுதி இல்லாதவன் தான் இவன் கட்சில இருக்கான்.

அடுத்த நாள் என்ன செய்யப் போகிறான் என்ற சிந்தனை முதல்வருக்கு கிடையாது. அவருடைய அமைச்சருக்கு கிடையாது. 2000ரூபாய் காசு வாங்கி விட்டதாக ஐயரை பிடிக்கிறான். பழனியில் நூறு கோடி ரூபாய் சொத்தை எழுதிக் கொடுக்கிறாங்க. இப்படிப்பட்ட மானங்கெட்ட அமைச்சர்களை வைத்திருக்கிறார்கள். ஊழலின் மொத்த உருவம் தமிழகத்தின் முதல்வர். நூறு ரூபா டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விக்கிறாங்க.. 150 கோடி ரூபாய் கருப்பு பணம் வாங்கி இருக்காங்க..

10  பைசாவுக்கு பிரிண்ட் அடிக்கிறத 10 கோடிக்கு பணம் சேர்த்து 5000 கோடி வைத்திருக்கிறான் ஆதவ் அர்ஜுனா. அவரது மாமியாருக்கு 5500 கோடி இருக்கிறது. ஆனா எங்க தலைவர்களிடம் பணம் எப்படி வந்தது எப்படி வெள்ள வேஷ்டி கட்டுகிறார் என்று கேட்கின்றனர். போடா விளக்கெண்ண. உன்னால் என்ன செய்ய முடியும் எங்கள் தலைவர்களை அவமரியாதை படுத்தினால்  அடித்து விரட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். எந்த இடத்தில் என்ன பேசினாலும் அடிப்போம். திமுகவிற்கு என்று ஒரு உறம் இருக்கிறது என்றார்.

Related

“முதலமைச்சரை அவதூறாக பேசுவதும், கொலை மிரட்டல் விடுப்பதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழி வகுக்கும் : அமைச்சர் நிர்மல் குமார்!”