கரூர்: முதலமைச்சர் ஜோசப்விஜய் கரூரில் ஆற்றிய உரை:
அறிமுகம் வந்திருக்கிறோம். ஆனா, எல்லாத்தையும் விட ரொம்ப ஜாஸ்தியான அந்த வலியும், அந்த காயமும் எனக்கு வந்து... அந்த கரூர் சம்பவம்தான். மக்களை சந்திக்கிறதுக்காக... மக்களை சந்திக்கணும், மக்கள் பிரச்சினைகளை எடுத்துப் பேசணும், அதுக்காகத்தான் நம்ம மக்கள் சந்திப்பு பயணத்தைத் தொடங்கி திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டு இருந்தோம்.
அரியலூர் மற்றும் பெரம்பலூர் அனுபவம் அரியலூர்ல அந்த மீட்டிங் முடிச்சுட்டு பெரம்பலூர் போறதுக்கு முன்னாடி, அந்த பெரம்பலூர் போலீஸ் வந்து எங்களை அலர்ட் பண்ணாங்க. "சரிங்க, கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு, லேட் ஆயிடுச்சு, வராதீங்க" அப்படின்னு. So, we had no choice. போலீஸ் சொன்னா நம்ம அதை ஒபே பண்ணித்தானே ஆகணும். அதே நேரத்துல பெரம்பலூர் மக்களோட அந்த சேஃப்டியும் மைண்ட்ல வச்சுக்கிட்டு, ஒரு மன வலியோடவே திரும்பப் போயிட்டோம். அதுக்கப்புறம் பெரம்பலூர் தொகுதி மக்களுக்கு மன்னிப்பும் கேட்டோம்.
கரூர் சம்பவமும் போலீஸ் அலர்ட்டும் அதேமாதிரி, நாமக்கல்ல அந்த மீட்டிங் முடிச்சுட்டு கரூர் வரும்போது, அந்த கரூர் போலீஸ் எங்களை அலர்ட் பண்ணிருக்கலாம்ல? "இல்ல சார், இங்க எதிர்பார்த்ததை விட கொஞ்சம் கூட்டம் அதிகமா இருக்கு, கண்ட்ரோல் பண்ண முடியல, வராதீங்க" அப்படின்னு. போலீஸ் நினைச்சா, அவங்க அந்த மீட்டிங்கையே கேன்சல் பண்ணலாம். "ஏதோ தப்பா இருக்கு, ஏதோ தப்பா தோணுது" அப்படின்னு நினைச்சுட்டாலே, they have all the rights to cancel the meeting. எங்ககிட்ட கேட்கணும்னுலாம் ஒன்னும் அவசியமே கிடையாது.
ஆனா, அதையெல்லாம் எதுவுமே செய்யாம, அந்த ஹைவேல இருந்த அந்த ஸ்பாட்டுக்கு போலீஸே எங்களை உள்ள கூட்டிக்கிட்டு வந்து விட்ட அந்த நாடகங்கள் இருக்கு பாருங்க... மக்களின் இழப்பும் வலியும். நம்பிட்டேங்க, முழுசா நம்பிட்டேன். அன்னைக்கு இருந்த அந்த கரூர் போலீஸ். பேசும்போது தேங்க்ஸ்லாம் சொன்னேன் அவங்களுக்கு. எனக்குத் தெரியாது இப்படி ஒரு நாடகம் நடக்கும்னு.
இதுக்கெல்லாம் யார் காரணம்? இதெல்லாம் யார் சொல்லிச் செய்தது? “இப்படி பண்ணுங்க, அப்படி பண்ணுங்க, சப்போஸ் அப்படி நடந்தா இப்படி பண்ணுங்க, சப்போஸ் இப்படி நடந்தா இந்த மாதிரி இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்லாம் கொடுத்து, அந்த பிரஷர் போடுறது யாரு?” அந்த சம்பவத்துல நம்ம யாரையெல்லாம் இழந்திருக்கோம் தெரியுமா? ஒரு டிவில என் படமோ, பாட்டோ வந்துச்சுன்னா, "அம்மா, விஜய் மாமா, அம்மா, விஜய் மாமா" அப்படின்னு சொல்லி அவங்க அம்மாகிட்ட சிரிச்சுக்கிட்டு, அந்த டிவி ஸ்கிரீனை போய் தொட்டு முத்தம் கொடுத்துக்கிட்டு, என் அக்கா, தங்கச்சிங்களோட தங்கப் பிள்ளைகளை இழந்திருக்கோம்யா!
மழலை... மழலை கூட சரியாக... சரியா வராதப்போ, ஒரு பேப்பர் மேகசின்ல என் போட்டோவைப் பார்த்தா, அது சிரிச்சுக்கிட்டு... அந்த கள்ளங்கபடம் இல்லாத அந்த சிரிப்பு, அந்த கடவுள் மாதிரி இருக்கிற அந்தப் பச்சை பிள்ளைகளை இழந்திருக்கோம்யா!. என் அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பி, குடும்ப உறவுகளை இழந்து, அந்த வலியோடு இருக்கிற என்னை... நீங்க, ஏளனமா பேசுறீங்களா? என் மேல பழியைத் தூக்கிப் போடுறீங்களா? இப்படி ஒரு சம்பவம் நடந்துருச்சு, "இது ஏன், எதனால, அதுக்கான பின்னணி என்ன?" என்று அந்த வலியோட வீட்டுல உட்கார்ந்துட்டு இருக்கிற என்னை, "ஓடி ஒளிஞ்சுட்டான்" வரை சொல்றீங்களா? வாயி, வாயினு ஒன்னு இருந்தா என்ன வேணாலும் பேசுவீங்களா?
மக்களே, நான் உங்களையே கேட்கிறேன், அன்னைக்கு அத்தனை கிரவுட் இருந்துச்சே, அந்த கிரவுடுக்கு தகுந்த மாதிரி போலீஸ் பாதுகாப்பு கொடுத்தாங்களா? "இந்த இடத்தை எடுத்துக்கச் சொல்லி நாங்கதான் சொன்னோம்"னு ஒரு போலீஸ் ஆபீசர் பேட்டி கொடுக்கிறாரே, அதுக்கு என்ன அர்த்தம்? இவ்வளவு வலி, இவ்வளவு காயங்கள் கொடுத்துட்டு, பழியைத் தூக்கி நம்ம மேல போட்டுட்டு, அதுல ஒரு அரசியல் ஆதாயம் தேடுறீங்களே யா? இதுல வாய்க் கூசாம சட்டசபையில ஸ்டாலின் சார் நம்ம மேல திருப்பி விட்டு, அங்க ஒரு அரசியல் செய்றாரே, அதுக்கு என்ன அர்த்தம்?
நமக்காக வந்திருக்கிற மக்களைக் காக்க வைக்கிறதுக்கு நான் ஒன்னும் ஆதாயம் தேடுற அரசியல்வாதி எல்லாம் கிடையாது; மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் இந்த விஜய்! எனக்காக எல்லாமும் கொடுத்த என் மக்களுக்காக, எல்லாத்தையும் விட்டுட்டு, மக்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்தவன் இந்த விஜய்! அவங்களுக்காக நன்றி கடன் செலுத்துறதுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்தவன் இந்த விஜய்! உங்களுக்குத்தான் இந்த விஜய்யைப் பத்தி நல்லா தெரியுமே!

2026 தேர்தல் மற்றும் எதிர்காலம் ஆனா, நம்ம எல்லாருக்குமே இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவங்களுக்கு, இந்த 2026 தேர்தல்ல தக்க பதிலடி கொடுத்துட்டீங்க. ஆனா, அது மட்டுமே பத்தாது மக்களே, அது மட்டுமே பத்தாது! காலகாலத்துக்கும் எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு, நிரந்தரமான ஒரு பதிலடியை நீங்க கொடுத்துக்கிட்டே இருக்கணும்!. இப்படியெல்லாம் பண்ணா, நான் மக்களை விட்டு ஓடிருவேன்னு நினைப்பா? யார் என்ன சொன்னாலும் நான் மக்களை விட்டு எல்லாம் ஓட மாட்டேன். அன்னைக்கும் சொன்னேன், இன்னைக்கும் சொல்றேன், நாளைக்கும் சொல்றேன், தில்லா சொல்லுவேன், கெத்தா சொல்லுவேன்...
பணமா? ஜனமா? அப்படின்னு கேட்டா, என் ஜனம்தான்டா எனக்கு முக்கியம்!. மக்களே, உங்களைவிட எனக்கு இந்த காசு பணம் முக்கியமா என்ன? இவ்வளவு குறைகள் நம்ம மேல சொல்றாங்களே, இப்ப நான் சொன்ன மாதிரி அவங்களால ஓபனா சொல்ல முடியுமா? அந்த தில் இருக்கா, திராணி இருக்கா? ஓரே... கிடையாது!
ஆனா, நம்ம மக்கள் அமைச்சுக்கொடுத்த நம்ம அரசை, குறைகள் மட்டும் டிசைன் டிசைனா, மாடல் மாடலா குறைகள் மட்டும் சொல்லுவாங்க. ஒவ்வொரு டிபார்ட்மென்ட்லயும், அந்த பார்ட்டி ஃபண்ட்... அந்த கட்சி நிதின்ற பேர்ல அடிக்கிற கொள்ளையெல்லாம் இந்த தீய சக்தியா இருக்கட்டும், தீந்து போன சக்தியா இருக்கட்டும், ரெண்டு பேரும் மாறி மாறி இதையேதான் செஞ்சுட்டு இருக்காங்க.
இதுல ஒரு ஹைலைட் காமெடி என்னன்னா, சட்டசபையில பேசும்போது "பார்ட்டி ஃபண்ட்"னு தான் சொன்னேன். அது எந்த பார்ட்டி, என்ன ஃபண்ட், யாரு, என்ன, பேரு... எதுவுமே சொல்லல. "பார்ட்டி ஃபண்ட்"னு சொன்ன உடனே எடுத்தாங்க பாருங்க ஒரு ஓட்டம்!. எனக்கே ஃபர்ஸ்ட் புரியல, "ஏன்பா ஓடுறாங்க, அப்படி என்ன நம்ம சொல்லிட்டோம்?" அதான், அந்த குற்றமுள்ள நெஞ்சுக்குத்தான் குறுகுறுங்கும். இது எப்படி இருக்கு தெரியுமா? "எங்கப்பா பீரோக்குள்ள இல்ல, எங்கப்பா பீரோக்குள்ள இல்ல" அப்படின்னு சொல்ற மாதிரி! ஐயோ, ஏன் கேக்குறீங்க, இவங்களோட செம்ம கூத்தா இருக்குங்க, செம்ம ஃபன்னா இருக்கு.
சென்னையில ஒரு பாலம் கட்டுறதுக்காக, நார்மலா ஆகுற செலவைவிட அதிக செலவுல, கிட்டத்தட்ட டபுள் மடங்கு செலவுல ஒரு டெண்டர் ஒன்னு விட்டுருக்காங்க. அதையெல்லாம் தோண்டி எடுத்து, அதையெல்லாம் இப்போ கண்டுபிடிச்சு, கேன்சல் பண்ணிருக்காங்க. இன்னும் எத்தனை கோடி ஊழல், எத்தனை லட்சம் கோடி ஊழல் தோண்டத் தோண்ட வருமோ... எங்களுக்கே தெரியல. ஒவ்வொரு முகமூடியா கிழியுது!
ஐயோ, "இந்த விஜய் ஒவ்வொரு தலையா எடுத்து வெளியில விட்டுருவான் போலயே"ன்னு திரும்புற பக்கமெல்லாம் கதறல், கதறல், கதறல், காதுல இருந்து இரத்தம் வராத குறை! ஆமா, இப்படி ஊழல்லயே ஊறிப்போனவங்க இப்படித்தான் இருப்பாங்க. அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள்
இந்த 50, 55 நாட்கள்ல நாங்க செஞ்ச சில விஷயங்களை சட்டசபையிலேயே எடுத்துச் சொன்னேன். பட், இங்க ஒரு சில விஷயங்கள் சொல்லணும்னு நினைக்கிறேன். இந்த மின்சாரத் துறையில இதுக்கு முன்னாடி போட முடியாம இருந்த அந்த பதவி உயர்வை வந்து, இப்பதான் எங்களால போட முடிஞ்சது. அதுக்காக ஒரு அக்கா அழுதுகிட்டே ஒரு நன்றி சொன்னாங்களே, அதெல்லாம் அவங்க கண்ணுல படாது, அந்த வீடியோ எல்லாம்... குறை சொல்றவங்களுக்கு!
அடுத்து, "லஞ்சம் எல்லாம் ஒழிக்க முடியாது, ஊழல் எல்லாம் ஒழிக்க முடியாது, அதெல்லாம் பிளட்லயே ஊறிப்போய் இருக்கு" அப்படின்னு சொன்னவங்க, போய் ஒவ்வொரு கவர்மெண்ட் ஆபீஸா பாருங்க, ஒரு பைசா லஞ்சம் இல்ல, ஒரு பைசா ஊழல் இல்ல! வேலை எல்லாம் சும்மா டக்கு டக்கு டக்கு டக்குன்னு நாங்க நடக்குது. ஒரு பெரியவர் ஒருத்தர் சொல்றாரு, "தம்பி, வேலை எல்லாம் நடக்குது, ஆனா அதையும் தாண்டி எங்களுக்கு மரியாதை கொடுக்குறாங்க தம்பி, உட்கார வச்சு எல்லாம் பேசுறாங்க!" இதெல்லாம் இதுக்கு முன்னாடி நடந்ததே இல்ல. "அவனைப்போய் பாரு, இவனைப்போய் பாரு, இந்த ஆபீசரை போய் பாரு"ன்னு சொல்லி அலைய விடுவாங்க. இப்ப லஞ்சம் இல்ல, ஊழல் இல்ல, வேலை எல்லாம் உடனே உடனே நடக்குது, மக்கள் அப்படி ஒரு பெருமூச்சு ஒன்னு விடுறாங்க! அதைப் பார்த்து நமக்கு அப்படி ஒரு ஹாப்பினஸ்! இதுக்கு மேல என்ன வேணும்? ஏன் இதெல்லாம் பண்ண முடியாது? மனசுன்னு ஒன்னு இருந்தா பண்ணலாம், இப்ப பண்ணல?
அதே மாதிரி இந்த எல் அண்ட் டி நிறுவனத்தோட 18,600 குரோர்க்கு (Crore) மூன்று திட்டங்கள், அந்த ஒப்பந்தம் அந்த கையெழுத்து போட்டுருக்கிறோம். கிட்டத்தட்ட 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு. நான் சொல்றது அந்த மூன்று மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கே அவ்வளவு வேலைவாய்ப்பு. குறுவை சாகுபடிக்காக 134 கோடியில அந்த சிறப்புத் தொகுப்புத் திட்டம் அறிவிச்சிருக்கிறோம் நம்ம விவசாயிகளுக்காக. இப்பவும் சொல்றேன் நம்ம விவசாயப் பெருமக்களே, உங்களோட இந்த அரசு கூடவே நிக்கும்.

பெண்கள் பாதுகாப்புக்காக 'சிங்கப்பெண் அதிரடிப்படை' அது உங்களுக்கு நல்லாவே முன்னாடியே தெரியும். வரப்போற அறிஞர் அண்ணா அவர்களுடைய பிறந்தநாள்ல, உங்க அண்ணனுடைய அரசுல, 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்' அறிவிக்கப்படும். இதெல்லாம் கேட்டாங்களே, "வாக்குறுதி கொடுத்தீங்களே என்ன ஆச்சு, என்ன ஆச்சு?"ன்னு, இந்த தீய சக்தி மாதிரி ரீல் தாய்மாமன் எல்லாம் கிடையாது, ரியல் தாய்மாமன்! எப்படி? ரியல்... ரியல் தாய்மாமன்!
இந்த தீய சக்தியைப் பற்றி, அவங்க நிர்வாகத்தைப் பற்றி ஒரு வெள்ளை அறிக்கை ஒன்னு வெளியிட்டோம்ல, அது ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா சொல்லணும்னா, ஒரு ஓட்டப் பாத்திரத்துக்குள்ள தண்ணி ஊத்திக்கிட்டே இருந்திருக்காங்க. பாத்திரம் எம்டியாவே (Empty) இருந்திருக்கு, ஆனா ஊத்துன தண்ணிதான் எங்க போச்சுன்னு தெரியல. கடவுளுக்குத்தான் வெளிச்சம்!. அதுமாதிரி இப்ப நம்ம சொன்னதெல்லாம் வந்து சும்மா ஒரு சாம்பிள் தான், இன்னும் வரப்போற நாட்கள்ல உங்க அரசுனுடைய அந்த விஸ்வரூபத்தை நீங்க பார்ப்பீங்க.
அடுத்து... வாயைத் தொறங்க சிஎம் (CM). அடடா! உங்க சிஎம்-ஐ நெஞ்சிலேயே குத்திக்கிட்டு வந்தீங்க பாருங்க, அது வேற லெவல்! "பேசுங்க பேசுங்க"ன்றிங்க, பேசினா எந்திரிச்சு ஓடிடுறீங்க. இனிமே பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி என்ன பண்ணனும் அப்படின்னா, ஒரு நண்பர் ஒருத்தர் சொன்னாரு, "மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எல்லா டோரையும் (Door) இழுத்து லாக் பண்ணுங்க" அப்படின்னு சொல்லிட்டு தான் பேச ஆரம்பிக்கணும் போலிருக்கு. ஏன்னா, பேசிக்கிட்டு இருக்கும்போதே எந்திரிச்சு ஓடிடுறாங்க. அஞ்சு நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர்ல கொத்து பரோட்டா போட்டாங்க! இதுக்கு மேல பேசினா மொத்தமா முடிஞ்சிரும், பாத்துக்கோங்க.
நாமா அரசியல் பேசினா, "விஜய் எல்லாம் அரசியல் பேசலாமா?" அப்படிங்கிறது. சரிப்பா, நமக்கு எதுக்கு வம்பு, நம்ம பாட்டுக்கு நம்ம வேலையை பார்ப்போம், எதுக்கு அவங்களைப் பத்தி பேசிக்கிட்டு அப்படின்னு இருந்தா, "விஜய்க்கு அரசியலே பேசத் தெரியல" அப்படிங்கிறது. இப்படியே மாறி மாறி… மேகதாது அணையைப் பற்றி என்ன தெரியும், விஜய் ஏன் அதைப் பற்றி பேசல? இப்படி நம்ம அரசியலுக்கு வந்ததுல இருந்தே ஒரு கூட்டம் குறை மேல குறையா சொல்லிக்கிட்டு... பாட்டுக்கு பாட்டு கச்சேரி எங்களுக்கும் பண்ணத் தெரியும், பண்ணலாமா?
இந்த மேகதாது அணை சம்பந்தமான அந்த வழக்குல, தமிழ்நாட்டோட பெட்டிஷனை (Petition) சுப்ரீம் கோர்ட் எப்போ ரிஜெக்ட் (Reject) பண்ணுச்சு? அப்போ யார் ஆட்சியில இருந்தா? ஏன் ஒழுங்கா வாதாடல? நீங்க ஒழுங்கா வாதாடி இருந்தீங்கன்னா அதை ரிஜெக்ட் பண்ணிருக்க மாட்டாங்கல்ல? ஏன் ஸ்டாலின் சார் வேணும்னே விட்டுட்டாரா? ஏன் இப்படிலாம் கேள்வி கேட்கலாமா? இப்படிலாம் கேள்வி கேட்டாதான் மேகதாது அணை பத்தி பேசுனதா அர்த்தமா?
"ஏன் அந்த ஸ்டேட் சிஎம் பேசுறாரு, நீங்க ஏன் பேசல?" அப்படின்னா, நம்ம ஸ்டேட்டோட உரிமையை எங்க நிலைநாட்டணுமோ, அதுக்காக வேலை பார்க்கிறது மட்டும்தான் முக்கியம். சும்மா சவால் விட்டுக்கிட்டு, "சீன் தீப்பார், நான் யார் தெரியுமா, தொட்டுப்பார்" இப்படிலாம் பேசிக்கிட்டு இருந்தா வேலைக்காகாது. சும்மா பேசிப் பேசிப் பிரச்சினையை வளர்த்துக்கிட்டு, யார் மேலயாவது பழியைத் தூக்கிப் போட்டுட்டு, அப்புறம் மக்கள் எல்லாம் அன்போடு தெருவுல விட்டுட்டு, இப்படித்தான் ஒரு அரசியல் பண்ணனும்னா, அந்த அரசியல் நமக்குத் தேவையுமில்லை, அதை நம்ம செய்யவும் போறதில்லை. Talk less work more மோடு (Mode) தான், அதுதான் நம்ம பாலிசியே (Policy)!
அதனாலதான் சட்டசபையில அந்த அரசு தீர்மானம்னு சொல்லி ஒன்னு கொண்டு வந்தோம், அதை எப்படி to take it forward, எப்படி கொண்டு போகணுமோ, அதைச் சரியா செய்வோம். சென்ட்ரல்... சென்ட்ரல் கவர்மெண்ட்ல இருந்து அந்த டீலிமிட்டேஷனை (Delimitation) திரும்பக் கொண்டு வரப்போறதா ஒரு பேச்சு ஒன்னு அடிபடுது. யார் என்ன டீலிமிட்டேஷன் கொண்டு வந்தாலும் தமிழ்நாடு அதை ஒத்துக்கவே ஒத்துக்காது! நமக்கான இடத்தை யாரும் பறிக்கவும் முடியாது, அதை பறிக்கவும் விடமாட்டோம்.
இப்படி நாமா இருக்கும்போது, இந்த தீய சக்தி திமுக எங்க போய் நிக்குது, யார் கதவைத் தட்டிக்கிட்டு நிக்குது? அது உங்களுக்கே நல்லா தெரியும் மக்களே, இந்த தீய சக்தியும் தீந்து போன சக்தியும் வேற வேற எல்லாம் இல்ல, கூட்டுக்களவாணிங்க! சொல்ல முடியுமா அவங்களால? "எங்களுக்குள்ள ஒட்டும் இல்ல, உறவும் இல்ல"ன்னு அறிவிக்க முடியுமா? நிரூபிக்க முடியுமா? இந்த வரப்போற இடைத்தேர்தல்ல அதை நிரூபிச்சுக் காட்டுங்க, அப்புறமா பேசுங்க.
மக்களே, என் மனசை விட்டு கரூர் எப்பவும் நீங்கவே நீங்காது. நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை, நமக்கு எதிரா நடந்த சதியை, சூழ்ச்சியை, இனி வர்ற ஜெனரேஷனும் அவங்களுக்குத் தெரியப்படுத்தணும்ல? அதுக்காகவே, இனி ஒரு அரசியல் சதியை, அரசியல் சூழ்ச்சியை, யாரும் யோசிக்கவே கூடாதுன்றதுக்காகவே, கரூர்ல ஒரு நினைவுச் சின்னத்தை நம்ம டிவி கே (TVK) சார்பா அமைக்கப்படும் அப்படின்றதை அறிவிக்கிறோம்.

அப்புறம், கரூர்ல இருந்து ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களுக்கும் சொல்றேன், உங்க டிவிகே அரசு உங்களுக்காகத்தான் உழைக்கும். அடிப்படை வசதிகளை முதல்ல நிறைவேத்தணும்; ஒரு பக்கம் நிதி நிலைமையைச் சரிசெஞ்சுக்கிட்டு, இன்னொரு பக்கம் அப்படியே நாம சொன்னதுல பிரையாரிட்டி (Priority) பார்த்து ஒவ்வொன்னா படிப்படியா நிறைவேத்த ட்ரை பண்ணுவோம். இது எப்பவும் உங்களுக்கான அரசாத்தான் இருக்கும், இந்த விஜய் உங்க விஜய்யாத்தான் இருப்பான். நீங்க உரிமையோட உங்க கவர்மெண்ட்டை நீங்க அணுகலாம்.
இந்த தீய சக்தி ஆட்சி முடிஞ்சு பொட்டிக்குள்ள போனதுல இருந்தே என்னென்னமோ பண்றாங்க, இது ஏதோ பேசுறாங்க, 'சோபா'ங்கறாங்க, 'வாஷிங் மெஷின்'ங்கறாங்க. இந்த அரசியல் வியாபாரம் பண்றதுக்கான அந்த 'வெண்டிங் மெஷினே' அவங்கதான்! யாரு, இந்த திமுக. இதுல நம்மள பார்த்து 'வாஷிங் மெஷின்'ங்கறாங்க. எலெக்ஷன்ல ஓட்டுக்குக் காசு கொடுக்கிற அந்த கலாச்சாரத்தையே, அந்த கல்ச்சரை அடிச்சு நொறுக்கிருக்கிறோம். எலெக்ஷன்லயே அப்படி வேலை பார்த்த நாமை, நமக்கு எதுக்கு இந்த குதிரை, கழுதை, ஒட்டகப் பேரெல்லாம்? மக்கள் என் பக்கம்! அப்படி இருக்கும்போது நமக்கு எதுக்கு இந்த பேரெல்லாம்?
இந்த திருட்டு திமுக ஆட்சியை வச்சுக்கிட்டு ஊர் அடிச்சு உலையில போட்டு, இந்த கொள்ளையை அடிச்சதுனாலதான் உங்க கரூர் கம்பெனி ஓனர் ஒருத்தர்... எங்கே... எங்கே இருக்காருன்னே தெரியாம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு... "வரான் பாரு வேட்டைக்காரன்"னு ஓடிக்கிட்டே இருக்கிறாரு! இன்னொருத்தர் ஃபாரின்ல (Foreign) போய் ஒளிஞ்சுகிட்டார். ஃபாரின் உடனே ஸ்டாலின் சார்னு நினைச்சிற போறீங்க, அவரு இல்ல. எனக்கு எப்பவுமே ஸ்டாலின் சார் மேல ஒரு தனி பாசம் ஒன்னு உண்டு. அவரு கிடையாது, இவரு வேற... சிங்கப்பூருக்கு செக்கப்புக்கு போனார்ல, அவரு! இன்னும் தோண்டத் தோண்ட எத்தனை பேர் மாட்டப் போறாங்களோ தெரியல.
உங்ககிட்ட யாராவது லஞ்சம் ஏதாவது கேட்டாங்கன்னா, "கொடுக்க முடியாது"ன்னு சொல்லுங்க, நான் இருக்கேன் உங்களோட. அப்படியே யாராவது ஃபோர்ஸ் (Force) பண்ணாங்கன்னா, "இது எங்க மகன், எங்க பிள்ளை, எங்க அண்ணன், எங்க தம்பி, எங்க விஜய், எங்க விஜியோட ஆட்சி"ன்னு ஸ்ட்ராங்கா சொல்லுங்க! மக்களே, நீங்க கூட இருக்கும்போது லஞ்ச ஊழல் மட்டும் இல்ல, அதிகாரத்தை வச்சு ஆட்டம் போடுற யாரா இருந்தாலும் அடங்கிருவாங்க. அந்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு'ன்னு ஒரு காலத்துல கொள்கையோடு இருந்த கட்சி எல்லாம் இன்னைக்கு எப்படி இருக்கான்னு உங்களுக்கே தெரியும்.
அதாவது, இந்த டிவிகே கட்சியோட தலைவரை எதிர்க்கிறதுல ஒரு நியாயம் இருக்கு. ஏன்னா, உங்க பொழப்புல மண்ணள்ளிப் போட்டுட்டான். என்ன? இந்த ஊழல், லஞ்சம் எல்லாம் பண்ண மாட்டேன்னு சொல்லி உங்க அரசியலையே ஒரு திருப்புமுனைக்குக் கொண்டுவந்து விட்டுட்டான். மக்கள் வேற அவனைத்தான் நம்புறாங்க. சோ, இந்த விஜய்யை எதிர்க்கிறதுல ஒரு அரசியல் நியாயம் இருக்குது, அதை புரிஞ்சுக்கலாம்.
ஆனா இன்னைக்கு, இந்த விஜய்யை மக்கள் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு, ஒரு தீர்ப்பைக் கொடுத்து, மக்களுக்காக வேலை செய்யறதுக்காக 'முதலமைச்சரா' உட்கார வச்சிருக்காங்க! என்னமோ இன்னமும் நீங்கதான் ஆட்சியில இருக்கிற மாதிரி, "விஜய் கரூர்க்குலாம் போகக்கூடாது, விஜய் இங்க போகக்கூடாது, அது செய்யக்கூடாது, இது செய்யக்கூடாது"ன்னா புரியலையே? ஆட்சியில இருக்கும்போதுதான் இவ்வளவு கட்டுப்பாடெல்லாம் போட்டீங்க, எஸ்ஓபிஸ் (SOPs) எல்லாம் போட்டீங்க, ஸ்டாலின் சார் ஆபரேட்டிங் ப்ரொசீஜர் (Operating Procedure) எல்லாம் போட்டீங்க. இப்பவும் அதையே பண்ணிட்டு இருக்கீங்கன்னா என்ன சார் நியாயம்? இல்ல நான் தெரியாமதான் கேக்குறேன், இன்னும் கனவுலேயே இருக்கிறீங்களா? முதல்ல முழிச்சு வாங்க, ரியாலிட்டிக்கு (Reality) வாங்க! உங்க ஆட்சி எல்லாம் வீட்டுக்குப்போய், டிவிகே-னு ஒரு ஆட்சி வந்து ரொம்ப நாள் ஆச்சு!
"ஒழுங்கா படி ஒழுங்கா படி" என்று சுப்ரீம் கோர்ட் ஓங்கி மண்டையிலேயே நருக்கு நருக்கு நருக்கு என்று செம்மட்டியாலே அடிச்சும், இந்த திமுக முழிச்சுக்கல அப்படின்னா, அவ கொஞ்சம் கஷ்டம்தான். வெற்றி தோல்வி எல்லாம் அரசியல்ல சகஜம் சார். அதுக்காகவெல்லாம் வெறி பிடிச்சு, இந்த பதவி வெறி பிடிச்சு எல்லாம் அலையத் தேவையில்லை. நல்ல விதமாவே சொல்றேன், நியாயமான அரசியல் பண்ணுங்க. ஓ... அதுதான் உங்களுக்குத் தெரியாதுல?
இந்த தீய சக்தியைத் திருத்தவும் முடியாது, அவங்களா திருந்துவாங்கன்னு பார்த்தா அதுவும் நடக்கப்போறதில்லை. அதனால வரப்போற இடைத்தேர்தல்ல மக்களே, இந்த தீய சக்தி திமுகவை நல்லா வச்சு வெளுத்து விடுங்க!. கான்ஃபிடென்ட்டா (Confident) இருங்க மக்களே, நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்! மீண்டும் சந்திக்கும் வரை, நன்றி வணக்கம் எனப் பேசினார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.