தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பொதுவான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பள்ளியிலே படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத ஒரு சூழலை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. குறிப்பாக தங்களுடைய கட்சியினுடைய நிர்வாகிகள் மீது ஒரு குற்றம் சுமத்தப்படும் போது அவர்களைப் பாதுகாப்பதில் தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களே தவிர பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைப்பதே கிடையாது என கனிமொழி எம்பி தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

இதுவரைக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து தமிழக வெற்றி கழக அமைச்சர்களோ முதலமைச்சரோ அமைச்சர்களோ எந்த கேள்வியையும் எழுப்பியதாக எனக்கு நினைவில் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு கனிம வளம் தொடர்பான மசோதா தமிழக உரிமையை பாதிக்கக்கூடிய ஒரு மசோதா நிறைவேற்ற பட்டு இருக்கிறது. எந்த விவாதமும் இல்லாமல் அதைப் பற்றிக் கூட தமிழகத்தில் இருக்கும் தமிழக வெற்றிக்கழக அரசு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எதிர்ப்போம் எதிர்ப்போம் என்று சும்மா வாய் வார்த்தையால் சொல்கிறார்களே தவிர தமிழகத்தை தமிழ்நாட்டை பாதிக்கக்கூடிய பிரச்சனைகளில் கூட எதிர்த்து எதையுமே பேசுவதில்லை என்பதுதான் உண்மை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதலமைச்சராக இருந்த தளபதி அவர்கள் கொண்டு வந்த திட்டத்தை அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நீட்டித்து இருப்பது நிச்சயமாக வாழ்த்துக்குரியது. திமுக அதிமுக கூட்டணி என்பது தமிழக வெற்றி கழகத்தின் கனவாக இருக்கலாம் நிச்சயமாக அதற்கு வாய்ப்பில்லை

இதுவரைக்கும் தொடர்ந்து பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. தூத்துக்குடியிலேயே மூன்றாவது குற்றச்சாட்டு என்று நினைக்கிறேன். தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகள் வந்து கொண்டு இருந்தாலும் அவர்கள் மீது வழக்கு போடுவதோ சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவது கிடையாது. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பொதுவான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது எனத் தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.