சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞர், தற்போதைய முதல்வர் விஜய் காலில் விழுவது போல் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவதூறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு திமுக வழக்கறிஞர்கள் இணை ஆணையரிடம் புகார் அளித்தனர்.

சென்னை, தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்தை ஏ ஐ மூலம் தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் காலில் விழுவது போல் மர்ம நபர்கள் சித்தரித்து பேஸ்புக் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

 இதனை பார்த்து திமுகவினர் கொதித்தெழுந்தனர். இந்நிலையில் வடசென்னையில் உள்ள முன்னாள் திமுக வடக்கு  மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் காணிக்கை நாதன் தலைமையில் மகளிர் அணியில் லட்சுமி வேலு,நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் கார்த்திக் செங்குட்டுவன், தகவல் தொழில் நுட்ப அணி பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், சொப்பனா தேவி, வழக்கறிஞர் கோகுல் ராஜ்குமார், தினகரன் ஆகியோர் இன்று காவல்துறை இணை ஆணையர் மனோகரை சந்தித்து புகார் மனுவை கொடுத்தனர். புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக இணை ஆணையர் உறுதி அளித்துள்ளதாக வழக்கறிஞர் காணிக்கைநாதன் தெரிவித்தார்.

Related

““சாப்பிட சாப்பாடு கூட இருக்காது” - ஐஏஎஸ் அகாடமி விழாவில் உருகிய அமைச்சர் அருண் ராஜ்!”