திருச்சி: லால்குடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற லீமா ரோஸ் மார்ட்டின் எம்.எல்.ஏ.வை, இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட லீமா ரோஸ் மார்ட்டின் வெற்றி பெற்றார். இவருக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகிகளான மாநில பொறியாளர் அணி செயலாளர் தேனி வினோத், மாநில மகளிரணி துணைச் செயலாளர் லீலா பாய் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.