சென்னை: தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் இதுவரை அமல்படுத்தவில்லை, இனியும் அமல்படுத்தப்படாது என சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ஏ. எம். ஷாஜஹான் தெரிவித்துள்ளார். 

 சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ஏ. எம். ஷாஜஹான் சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில், புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பிய 410 யாத்ரீகர்களை வரவேற்றார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஷாஜகான், “இந்தியாவில் எந்த மாநிலத்திலும் புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் இதுவரை அமல்படுத்தவில்லை, இனியும் அமல்படுத்தப்படாது. இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்.

புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பிய 410 யாத்ரீகர்களை வரவேற்ற அமைச்சர் ஷாஜஹான்.

உமித் போர்ட்டலில் வக்பு சொத்துக்களை பதிவேற்றம் செய்வதில் பல சவால்கள் உள்ளன. அதிகாரிகள் இயன்றவரை அதில் பதிவேற்றம் செய்துள்ளனர். விடுபட்டவைகள் பதிவேற்றம் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். வக்ப் சட்டத்திருத்தத்தில் பல்வேறு ஷரத்துகளை எதிர்ப்போம். அதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றுவோம்” இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மு.அ. சித்திக், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் வ. தட்சிணாமூர்த்தி,  ஆகியோர் உள்ளனர்.

Related

“முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருடன் முதல்வரை சந்தித்த அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்!”