சென்னை: தமிழக ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்தித்த நிலையில் தலைமைச் செயலாளர், டிஜி.பி., உள்ளிட்டோருடன் ஆளுநர் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை 2 வது நாளாக சந்தித்தார்.

ஆட்சி அமைப்பதற்கான முழு ஆதரவுப் பட்டியலை அளித்த பின்னர் விஜய் ஆட்சி அமைக்க அழைக்கப்படலாம் என்ற நிலை இருந்த்து. 

 இதற்கிடையே ஆளுநர் மாளிகை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விஜய் பெரும்பான்மை நிரூபிக்க வில்லை எனத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர், தலைமைச் செயலாளர், மற்றும் டிஜிபியிடம் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

ஆலோசனையின்போது தமிழக சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும் , அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிகிறது. 

இதற்கிடையே ஆளுநரின் உத்தரவு இல்லாமல் விஜய்க்கு பாதுகாப்பு வாகனங்களை அனுப்பியது குறித்தும், செங்கோட்டையன் தலைமை செயலாளரை சந்தித்தது குறித்தும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது

Related

“பள்ளிகளில் காலியாக உள்ள 1800 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும்: அன்புமணி ராமதாஸ்”