தூத்துக்குடி: விசைப்படகுகள் இன்னும் கடலுக்கு செல்லாத நிலையில் திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.
சீலா மீன் கிலோ 1600 ரூபாய் வரையும் விளை மீன் 750 ரூபாய் வரையும் கூலி கிலோ 700 ரூபாய் வரையும் பாறை மீன் கிலோ 550 ரூபாய் வரையும் சாலை மீன் ஒரு கூடை 2000 ரூபாய் வரை விற்பனையானது.
மீன்பிடி இனப்பெருக்கத்திற்கான மீன்பிடி தடைக்காலம் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது தமிழக முழுவதும் விசைப்படகுகள் வருகிற ஜூன் 14ஆம் தேதி கடலுக்கு செல்கின்றன இதன் காரணமாக நாட்டு படகுகள் மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றன .
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் இன்று சனிக்கிழமை என்பதால் கரை திரும்பின ஆனால் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது இதன் காரணமாக மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.

வஞ்சிரம் மீன் அழைக்கப்படும் சீலா மீன் கிலோ 1600 ரூபாய் வரையும் விளை மீன் கிலோ 800 ரூபாய் வரையும் ஊளி மீன் கிலோ 750 ரூபாய் வரையும் பாறை மீன் கிலோ 550 ரூபாய் வரையும் நண்டு ஒரு கிலோ 800 ரூபாய் வரையும் கேரை மற்றும் சூறை ரகமீன்கள் கிலோ 400 ரூபாய் வரை விற்பனையானது சாலை மீன் ஒரு கூடை 2000 ரூபாய் வரை விற்பனையானது மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையிலும் ஓரளவு விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.