திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மா வழங்கினார்.

திண்டுக்கல், மாநகர தவெக சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தளபதி சஞ்சய் தலைமையிலும், 27 வது வார்டு செயலாளர் திருஞானகுரு முன்னிலையில் திண்டுக்கல் சாத்தங்குடி நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தவெக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மா கலந்துகொண்டு நகரின் பல்வேறு பகுதிகளில் கல்வி பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி சிறப்பித்தார் மேலும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சரவணகுமார், செந்தில், ராம், ராஜா,கோபி, இப்ராஹிம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.