திண்டுக்கல்லில் நடைபெற்ற தவெக அரசுக்கு எதிரான அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சட்டசபையில் நாங்க இருக்கும் போது சட்டசபையில் ஜனநாயகம் இருந்தது. இப்போது ஜனநாயகம்னு பேர் வச்சிருக்கற நடிகர கட்சியில, ஜனநாயகம் கிடையாது.எடப்பாடி ஆட்சி காலத்தில் தான் சி.ஏ.ஏ, நீட் அனுமதி கொடுக்கப்பட்டது என ஆளுங்கட்சி கூறுவது தவறானது எனத் தெரிவித்தார்.
தமிழக விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்தும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறியதை கண்டித்தும் தமிழக அரசுக்கும், த.வெ.க அரசை கண்டித்தும் திண்டுக்கல் நாகல்நகரில் அதிமுக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரரும் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மேற்கு மாவட்டச் செயலாளர் பரமசிவம் கட்சி நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் சட்டசபையில நீங்க இருக்கும் போது நடந்த நிகழ்வுகளும், இப்ப நடக்கக்கூடிய நிகழ்வு குறித்த கேள்விக்கு, நாங்க இருக்கும் போது சட்டசபையில் ஜனநாயகம் இருந்தது. இப்போது ஜனநாயகம்னு பேர் வச்சிருக்கற நடிகர கட்சியில, ஜனநாயகம் கிடையாது. சர்வாதிகாரம்தான் நடந்துகிட்டு இருக்கிறது. கேலிக்கூத்து நடக்குது. ஒரு மோசமான சூழ்நிலை. சட்டசபை இப்படியும் ஒரு கேவலமாக நடந்துகிட்டு இருக்கிறது. 1 லட்சம் கோடி வெளிநாட்டு ஒப்பந்தங்கள் குறித்தும், செய்தியாளர் நிகழ்ச்சிக்கு அனுமதிக்காதது குறித்து கேள்விக்கு இதெல்லாம் நீங்க பத்திரிக்கையில டிவில சொல்லுங்கள். பூரா ஏமாத்துறாங்க, சட்டம் போடுறாங்க, இதத்தான் போடணும் சொல்கிறார்கள் என்று சொல்லுங்கள்.
சட்டமன்றத்துல நிதியமைச்சர் என்னோட ஸ்டைல் இப்படித்தான் இருக்கும் என்று கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நிதியமைச்சர் மரிய வில்சன் தவறுகளை சக சட்டமன்ற உறுப்பினர்கள் சொல்லிக் காட்டுகிறார்கள். ஆனால், அவர் நான் இப்படித்தான் இருப்பேன் போங்கன்னு திமிராக பேசுகிறார். ஆணவத்தின் உச்சியில் இருக்கிறார் அதான் பதில் என்றார்.

எம்.ஜி.ஆர் ஆட்சி நாங்கதான் கொடுக்கிறோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியது குறித்த கேள்விக்கு, இதை விட வெட்கக்கேடு எதுவுமே இல்லை. நாம பிறந்த பிள்ளைக்கு நாங்க பேர் வைக்கிறோம். எம்.ஜி.ஆர்க்கும், அம்மாவுக்கு பிறந்த பிள்ளைகள், அண்ணன் எடப்பாடியார் தலைமையில் நடக்கிறது. அதிமுக ஆட்சிதான் நடக்குதுன்னா. ஒத்துக்கிட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ராஜினாமா பண்ணிறலாம் என்றார்.
நிதியமைச்சர் வாக்குறுதிகள் அனைத்தும் நிதி இருக்கும் பொழுது செயல்படுத்தப்படும் என்று கூறியது குறித்த கேள்விக்கு, நிதி இல்லன்னு தெரிஞ்சுதான் வாக்குறுதி கொடுக்குறாங்க. அந்த பேடித்தனம்னு சொல்லி இந்த ஆர்ப்பாட்டம். 90 நாள் தான் ஆகுதுன்னு சொன்னா இன்னும் 6 மாசம் நேரம் குடுங்கன்னு கேட்கலாம். அதை விட்டு எல்லாம் எங்களுக்கு தெரியும்ங்கற மாதிரி பேசுறது தவறு. விவசாயிகள் வாழ்க்கையிலும் வயித்துலையும் அடிக்காதீங்க வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்று தான் எடப்பாடியார் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.
த.வெ.க - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளனர் ஆனால் கர்நாடகா காங்கிரஸிடம் தமிழக காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதை அவங்களிடம் தான் கேட்க வேண்டும்.அதை கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. காங்கிரஸ் கட்சி யார் என்று அவங்களிடம் கேளுங்கள். எடப்பாடி ஆட்சி காலத்தில் தான் சி.ஏ.ஏ, நீட் அனுமதி கொடுக்கப்பட்டது என ஆதவ் அர்ஜுனா கூறியது குறித்த கேள்விக்கு சி.ஏ.ஏ வந்தது, நீட் வந்ததெல்லாம் காங்கிரஸ் - திமுக கூட்டணியில நாடாளுமன்றத்துல வந்தது. அது எல்லாருக்கும் தெரியும். இப்ப தேவையில்லாமல் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அதிமுக பதில்களை சட்டமன்றத்தில் கொடுப்பார்கள். ஆளுங்கட்சி சொல்றது தவறானது. அவ்வளவு தான்ப்பா என முடித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.