கரூரிலிருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திண்டுக்கல்லுக்கு வந்த அரசு பேருந்து திண்டுக்கல், M.V.M. கல்லூரி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது கியர் ராடு உடைந்தது. சுதாரித்த டிரைவர் பேருந்தை சாமர்த்தியமாக நடுவழியில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டார்.

இதனைத்தொடர்ந்து நடுவழியில் நின்ற அரசு பேருந்தை சிங்கப்பெண் அதிரடிப்படையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தள்ளி சென்று மேம்பாலத்திலிருந்து கீழே இறக்கி சாலையின் ஓரத்தில் நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

பழுதான அரசு பேருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்த சிங்கப்பெண் அதிரடி படையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

Related

“வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த மாற்றமும் இல்லை”