தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் எல்லை பாதுகாப்பு படை டிஜிபியாக பணியாற்றி வரும் இவர், இப்போது தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் அகர்வால் (Mahesh Kumar Agarwal)  IPS சட்டம் பயின்று, 1994-ம் ஆண்டு தனது 22 வயதில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் தமிழக கேடர் அதிகாரியாக பணியில் சேர்ந்தவர்.

தேனி, தூத்துக்குடி மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளராகவும் 

சென்னை பூக்கடை மற்றும் போக்குவரத்து துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

மத்திய புலனாய்வுப் பிரிவில் (CBI) 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கு, இன்ஜினியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு மற்றும் சேலம் ரயிலில் நடந்த ரூ.5.78 கோடி கொள்ளை வழக்கு போன்றவற்றை மிகச் சிறப்பாக விசாரித்து குற்றவாளிகளைக் கைது செய்ததில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

2020-ம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் ஆணையராகப் (Chennai Police Commissioner) பணியாற்றினார். தமிழ்நாடு காவல் துறையின் ஆயுதப்படை டி.ஜி.பி.-யாக இருந்த இவர், தற்போது எல்லை பாதுகாப்புப் படையின் (BSF) இயக்குநர் பொறுப்பில் பணியாற்றினார்.

Related

“பள்ளிகளில் காலியாக உள்ள 1800 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும்: அன்புமணி ராமதாஸ்”