தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடலூர் வடக்கு மாவட்டம் சார்பில் மேல்பட்டாம் பக்கத்தில் அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி செயல் திட்டத்தின் சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மாவட்டத் தலைவர் ஷர்புதீன் தலைமையில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மதம் மாறியவர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிகார மையங்களின் அழுத்தங்களை தவிர்ப்படியாக்கி அரசியலமைப்பு சட்டத்தில் அதுக்கு உட்பட்ட தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்க வேண்டும் என்றும், எப் சி ஆர் ஏ சட்ட வரைவை தடுத்து நிறுத்த வேண்டும், இளைஞர்களுக்காக ரூல்ஸ் போட்டு அதை பரப்புவதில் காட்டுகின்ற கவனத்தை கல்வி சார்ந்த விஷயங்களிலும் நிதிபங்கிட்டை அதிகரிப்பதற்கும் கூடுதல் கவனம் செலுத்தி தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் படுகொலை மற்றும் சிறுமியர் பலாத்காரம் ஆகியவை நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது. போதை பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்க இரும்புக்கரம் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக வெற்றிக் கழக அரசு இஸ்லாமிய சமுதாயத்தின் நீண்ட கால கோரிக்கையான தனி இட ஒதுக்கீடு ஏழு சதவீதத்தினை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தணிக்கைக்குழு தலைவர் எம் எஸ் சுலைமான், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஏ கே அப்துல் ரஹீம், ஆயிஷா ஜாஃபர் ஆலீமா, ஆகியோர் விழிப்புணர்வு சிறப்புரையாற்றினர். மாநில செயலாளர் சேக் முகமது , மாவட்ட செயலாளர் முகமது ஜாஃபருதீன், மாவட்ட பொருளாளர் யாசர் அரஃபாத், மாவட்டத் துணைத் தலைவர் முகமது யாசின், துணைச் செயலாளர்கள் இஸ்மாயில் அபூபக்கர் சித்திக், ரிஸ்வான்,மற்றும் கிளை தலைவர் முகமது யூனுஸ், கிளைச் செயலாளர் முகமது ரஃபி மற்றும் இஸ்லாமிய சமுதாய மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”