கடலூர்: நாட்டின் 80- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, Life Sustainable Devolopment Trust சார்பில் பழங்குடியின மக்களுக்கு உணவு வழங்கி சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நாளில், நாட்டின் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் அனைவரும் சமமாக பங்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பழங்குடியின மக்களுடன் இணைந்து இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆர். கணேசன் எல். முருகன் ச.தமிழ்செல்வன் ஆர். குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, சுமார் 35 ஆண்டுகளாக ஆற்றுப்படுகை பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்கள், தங்களின் அடிப்படை தேவைகள் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து வேதனையுடன் தெரிவித்தனர்.
“நாடு சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் எங்களின் வாழ்க்கையில் இன்னும் முழுமையான சுதந்திரம் எப்போது வரும்? எங்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பான குடியிருப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் நிலையான வாழ்வாதாரம் எப்போது கிடைக்கும்?” என்ற கேள்வியை அவர்கள் முன்வைத்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.