கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ‘திறன் 1.0’ உள்நாட்டு ஹேக்கத்தானில், தகவல் தொழில்நுட்பம் மட்டுமின்றி பல்வேறு துறைகளைச் சேர்ந்த 500"க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
முதன்முறையாக 36 மணி நேர தொடர் ஹேக்கத்தான் நடைபெற்ற நிலையில், மாணவர்கள் குழுக்களாக இணைந்து நிஜ வாழ்க்கைச் சவால்களை அடிப்படையாகக் கொண்டு புதுமையான தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கினர்.
தொடர்ந்து 36 மணி நேரம் சிந்தித்து, திட்டமிட்டு, செயல்படுத்தி, தங்களது முன்மாதிரிகளை உருவாக்கிய மாணவர்கள், தொழில்துறை வல்லுநர்கள் முன்னிலையில் தங்களது படைப்புகளை விளக்கினர். இந்த ஹேக்கத்தான் தங்களுக்கு வகுப்பறையில் கற்ற அறிவை நடைமுறையில் பயன்படுத்துவதற்கும், குழுவாக இணைந்து பணியாற்றுவதற்கும் நல்ல வாய்ப்பாக அமைந்ததாக மாணவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

மாணவர்களின் படைப்பாற்றல், தொழில்நுட்பத் திறன், குழுப்பணி மற்றும் நடைமுறைத் தீர்வுகளை தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் மதிப்பீடு செய்து சிறந்த புதுமையான தீர்வுகளுக்கு பரிசுகள்,மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில்,இந்துஸ்தான் குழும நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் பிரியா ,கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.