கற்பதில் இருந்த சிரமத்தை ஓவியமாக மாற்றிய கோவை தனீஷா - நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை காட்சி படுத்தி கவனம் ஈர்ப்பு..!
கற்பதில் தனக்கு இருந்த சிரமங்களை சரியாகப் புரிந்து கொண்டு, தனது கவனத்தையும் திறமையையும் ஓவியத்தில் செலுத்திய கோவையைச் சேர்ந்த தனீஷா கிருஷ்ணன் ராஜேஷ், பல்வேறு கருப்பொருள்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார்.

குழந்தைகளின் உணர்வுகள், கனவுகள், திறன்கள் மற்றும் அவர்களுக்குள் இருக்கும் தனித்துவமான சிந்தனைகளை வெளிப்படுத்தும் வகையில் தனீஷா வரைந்த ஓவியங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. Different Minds. Equal Dreams’ என்ற தலைப்பிலான தனீஷாவின் ஓவியக் கண்காட்சி, கோவை அவினாசி சாலையில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் கலாச்சார மையத்தில் நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட் 19 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், தனீஷாவின் கற்பனைத் திறன், உணர்வுகள் மற்றும் வித்தியாசமான பார்வையை வெளிப்படுத்தும் பல்வேறு ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து மாணவி தனீஷா கூறுகையில் கற்றல் குறைபாடு என்பதை தாண்டி அனைவருக்கும் தனித்திறமைகள் இருப்பதாகவும்,அவற்றை புரிந்து கொண்டு பயிற்சி எடுத்தால் தம்மை போல யாராலும் சாதிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தனது தனித்துவமான திறமையை அடையாளம் கண்டு அதனை ஓவியக் கலையின் மூலம் வெளிப்படுத்தி வரும் தனீஷாவின் முயற்சி, பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. வேறுபட்ட சிந்தனைகள்... சமமான கனவுகள்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் இக்கண்காட்சியை பள்ளி மாணவர்கள், பொதுமக்கள்,கலை ஆர்வலர்கள் என பலரும் கண்டு வியந்து வருகின்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.