கோவை: கோவை மாநகர் மேட்டுப்பாளையம் ரோடு ஹைதர் அலி திப்பு சுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் சார்பாக 80வது சுதந்திர தினம் கொண்டாடப் பட்டது.
இந்திய சுதந்திரப் போரட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும், அவர்களை நினைவு கூறும் வகையிலும் மாமன்னர் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் அவர்களின் நினைவாகவும் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டது.
சுதந்திர தின விழாவை ஒட்டி மேஜர் நவாஸ்கான் Company Commander. (Indian Army) கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.
இன்றைய தினம் கோவை அரசு மருத்துவமனை சார்பாக இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சுமார் 50திற்கும் மேற்பட்ட நபர்கள் மூலமாக இரத்ததானம் செய்யப்பட்டுள்ளது, மேலும் கோவை ஐ பவுண்டேஷன் சார்பாக இலவச கண் பரிசோதனை முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் 30திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண் பரிசோதனை நடைபெற்று 5 நபர்களுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இன்றைய இரத்ததான முகாமில் நிர்வாகிகளும் இரத்ததானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்வாகிகள் மூலம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான முறையில் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.