கோவில்பட்டி: தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள நிலையில் அதனை வரவேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர், தமிழக வெற்றிக் கழகத்தினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர்  பெருமாள்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு மாதத்திற்கு முன்பு அமைந்து இருக்க வேண்டிய கூட்டணி தற்போது அமைந்துள்ளது. தாமதமானதும் பரவாயில்லை நல்ல கூட்டணி அமைந்துள்ளது.

த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் நாடாளுமன்றத்திற்கு தலைவர் ராகுல் காந்தி பற்றி தான் மக்கள் இப்போது அதிகமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.  த.வெ.கவுடன் கூட்டணி வேண்டுமென்ற தொண்டர்களின் எண்ணம் இன்று நிறைவேறி உள்ளது என்றார். 

Related

“பள்ளிகளில் காலியாக உள்ள 1800 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும்: அன்புமணி ராமதாஸ்”