மாவட்ட ஆட்சியர்களை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய மாவட்ட ஆட்சியர்கள் விவரம்,:
🔹 மதுரை ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார் → நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்
🔹 தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் டாக்டர் ஆர். வைத்திநாதன் → தேனி மாவட்ட ஆட்சியர்
🔹 திருச்சி மாவட்ட ஆட்சியர் வி. சரவணன் → தர்மபுரி மாவட்ட ஆட்சியர்.
🔹 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம். பிரதாப் → கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்.
🔹 நிதித்துறை இணைச் செயலாளர் பிரதிக் தயால் → திருச்சி மாவட்ட ஆட்சியர்.
🔹 வந்தனா கார்க் → திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்.
🔹 விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் ஜே.இ. பத்மஜா → கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்.
🔹 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி என். பிரியா → ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்.
🔹 திருச்சி மாநகராட்சி ஆணையர் எல். மதுபாலன் → நாமக்கல் மாவட்ட ஆட்சியர்.
🔹 உயர்கல்வித்துறை துணைச் செயலாளர் ஆர். ரேவதி → தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்.
🔹 கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் டாக்டர் எம். வீரப்பன் → செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்.
மாவட்ட ஆட்சியர் பதவியில் இருந்து மாற்றப்பட்டவர்கள்:

🔸 கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா → சுகாதாரத்துறை துணைச் செயலாளர்
🔸 தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் → தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன நிர்வாக இயக்குநர்.
🔸 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆர். சதீஷ் → வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை இயக்குநர்.
🔸 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே. தர்பகராஜ் → கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்.
🔸 வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர். சுப்புலட்சுமி → தமிழ்நாடு ஊரக மாற்றுத் திட்ட முதன்மை செயல் அலுவலர்.
🔸 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் கஹ்லோன் → சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலாளர்.
முக்கிய துறை மாற்றங்கள்:
🔹 இ. சுந்தரவல்லி, கல்லூரிக் கல்வி ஆணையர் → பொதுத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறை சிறப்புச் செயலாளர்.
🔹 ஆர். லலிதா, நியூ திருப்பூர் ஏரியா டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் MD → நிதித்துறை செயலாளர்.
🔹 பூஜா குல்கர்னி, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய CEO → மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர்.
🔹 வி. அமுதவல்லி → ஊரக வளர்ச்சி ஆணையர்
🔹 பி. பொன்னையா, ஊரக வளர்ச்சி ஆணையர் → கல்லூரிக் கல்வி ஆணையர்
🔹 டாக்டர் டி.ஜி. வினய், தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழக MD → இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்.
🔹 ஆர். கண்ணன், தமிழ்நாடு வாட்டர்ஷெட் மேம்பாட்டு முகமை MD → கரும்பு ஆணையர்.
🔹 சந்திர சேகர் சகாமுரி CMDA CEO → வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநர்.
🔹 டாக்டர் எஸ். உமா, சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் → தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்ட இயக்குநர்.
🔹 கே. பாலசுப்ரமணியம், பொதுத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறை கூடுதல் செயலாளர் → இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.