நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி முற்போக்கு மாணவர் கழகம் சார்பாக நந்தனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை நந்தனத்தில் உள்ள நந்தனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாணவரமைப்பான முற்போக்கு மாணவ கழகம் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யவும் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு உணர்ந்து மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும்  டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதில் முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநில பொறுப்பாளர் மோனிஷ்வரன் கலந்துகொண்டு மாணவர்களிடையே கோஷங்களை அனுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் மேலும் வருகின்ற 27ஆம் தேதி விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related

“தாய் கண்முன்னே அருணாச்சலத்தை அடித்துள்ளனர் - பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி”