சென்னை: வண்ணாரப்பேட்டை வீரா குட்டி தெருவில் உதவும் கைகள் அறக்கட்டளை மற்றும் திணை நிலவாசிகள் அமைப்பு ஒருங்கிணைப்பில் நடைபெற்ற தோழர் நல்லகண்ணு மார்பளவு திருவுருவச் சிலை திறப்பு மற்றும் "அம்மாச்சி கற்பனையின் முதல் ஆசிரியர்" நூல் வெளியீட்டு விழாவில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

நிகழ்வில், தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு மார்பளவு சிலையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின், பின்னர் "அம்மாச்சி கற்பனையின் முதல் ஆசிரியர்" நூலையும் வெளியிட்டார்.

இந்நிகழ்விற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஜே.ஜே. எபினேசர், சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, பகுதி செயலாளர்கள் ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், செந்தில்குமார், சுரேஷ்குமார், வட்டச் செயலாளர்கள் தமிழ்ச்செல்வன்,கார்த்திக் செங்குட்டுவன்
மாவட்ட அமைப்பாளர் நெசவாளர் அணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் வேம்புலி ஆர்.கே l.நகர் பகுதி செயலாளர் ஜெய்சங்கர் ஏ ஐ டி யு சி எம்.எஸ்.மூர்த்தி, ஏ ஐ ஒய்ஃப் காவிரி செல்வம்,உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.