சென்னை: திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எண்ணூர் ஜே.ஜே. நகரில், "ஜனநாயகன்" திரைப்பட வெளியீட்டை கொண்டாடும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் உற்சாக விழா நடைபெற்றது.
மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சுமித்ரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆயிரம் பெண்களை தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் 500 பெண்களுக்கு புடவைகள், 500 பேருக்கு பிரியாணி, மேலும் 50 குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் திருவொற்றியூர் 3-வது வார்டு நிர்வாகிகள் சதீஷ் பாபு, தீபா உள்ளிட்டோர் மற்றும் மாவட்ட, வட்டக் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Related

“திடீரென வெடித்து சிதறிய குளிர்சாதனப் பெட்டி - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள்! ”