சென்னை: வடசென்னை, ராயபுரம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகம் வடக்கு தெற்கு மாவட்ட தொண்டர் அணி சார்பாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை எம்எல்ஏ விஜய தாமு துவக்கி வைத்தார்.
சென்னை ராயபுரம் மரகதம் திருமண மாளிகையில் தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றி கழகத்தின் மற்றும் மேஜிக் பஸ் சென்னை வடக்கு தெற்கு தெற்கு மாவட்ட தொண்டரணி ராயபுரம் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட செயலாளர் கட்பீஸ் விஜயராகவன் மற்றும் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய தாமு துவக்கி வைத்தார். இளைஞர் ஒருவருக்கு மாவட்ட செயலாளர் மற்றும் எம்எல்ஏ பணி ஆணை வழங்கினார். முத்தூட் பைனான்ஸ், ஸ்டேட் பாங்க், எல்ஐசி, ஏபிடி மாருதி, ஏசியன் லிப்டன் எஸ்கலேட்டர் பிரைவேட் லிமிடெட் ஆதவன் கார்ப்பரேட் கம்பெனி, hd bfc, வொர்க் பிரிக்ஸ், இன்போ சர்ச், சினிமாஸ் பிவிஆர் ஐநாக்ஸ் சினிமாஸ், இந்தியா மேட்ப்ளஸ், மகேந்திரா பிக் பாஸ் கேட் உள்ளிட்ட நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைக்கு ஆட்களை எடுத்தனர் வேலை வாய்ப்பு முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ராயபுரம் வண்ணாரப்பேட்டை கொருக்குப்பேட்டை திருவொற்றியூர் மீஞ்சூர்,பொன்னேரி, கொளத்தூர் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மாவட்ட அமைப்பாளர் தொண்டரணி விக்னேஷ் செய்திருந்தார் இந்நிகழ்ச்சியில் தொண்டரணி நிர்வாகிகள் மாவட்ட கழக நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள் வட்டக் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.