எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், இந்திய வழக்கறிஞர் மன்றத்தின் (BCI) துணைத் தலைவரும், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் (TNAA) தலைவருமான எஸ்.பிபாகரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கொண்டார்.
எஸ்.பிபாகரன் அவர்கள் 1990 முதல் வழக்கறிஞராக சட்டத் துறையில் சேவை செய்து வருகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்திய வழக்கறிஞர் மன்றம் மற்றும் மாநில அமைப்புகளில் உள்ள முக்கிய பதவிகளுக்குப் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், இந்திய வழக்கறிஞர் மன்றத்தின் துணைத் தலைவரும், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவருமான எஸ்.பிபாகரன் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் முன்னிலையில், தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.