சென்னை:  சென்னை எழும்பூரில் தமிழக வெற்றிக் கழக, சென்னை மத்திய மாவட்டம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வாழ்த்துக்களுடன் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில்,  தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் சாதனைகள் குறித்து எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும்,பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில், சென்னை மத்திய மாவட்ட கழகச் செயலாளர் பூக்கடை எஸ்.கே.எம்.. குமார் மற்றும் எழும்பூர் மேற்கு பகுதிச் செயலாளர் எஸ். நந்தா ஆகியோரது ஏற்பாட்டில், எழும்பூர் பகுதியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூபாய் 5000 ஊக்கத்தொகையும், 5 மகளிருக்கு தையல் இயந்திரங்களும், 300 மகளிருக்கு புடவைகளும் அமைச்சர் ஆனந்த் வழங்கினார்.

இந்நிகழ்வில், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன்,  தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் ஏ.லயோலா மணி , சென்னை மத்திய மாவட்ட கழகச் செயலாளர் பூக்கடை எஸ்.கே.எம். குமார் அவர்கள், எழும்பூர் கிழக்கு பகுதி செயலாளர் T.ராஜேஸ் கழக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ,செய்தித் தொடர்பாளர்கள் பி.ஜெகதீச பாண்டியன் மற்றும் ஓட்டேரி ஜெயக்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலகங்கா, கழக நிர்வாகி சி. மகேந்திரன் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related

“பெண் கல்வி, விவசாயம் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளது மக்கள் இயக்கம்”