சென்னை: 50 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினை பார்த்து அரசியலை விட்டு விலக வேண்டும் என நிர்மல் குமார் பேசுகிறார். அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சென்னை அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் என்ற பழமொழி சொல்வதைப் போல தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் செயல்பட்டு வருவதாகவும் 2006 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி அமைத்தது போல் விஜய் ஆட்சி அமைக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணியில் இருந்த தோழமைக் கட்சிகளுக்காக திமுகவினர் வேலை செய்து வெற்றி பெற செய்ததாகவும் அவர்களின் வெற்றியால்தான் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்துள்ளதாகவும் கூறினார்.
மதிமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் திமுகவால் தான் 2024 ஆம் ஆண்டு துரை வைகோ வெற்றி பெற்றார். திமுக ஆதரவில் தான் எனக் கூறிய அவர் திமுக உதவியோடு தான் வெற்றி பெற்றோம் என்று மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக பக்கம் நின்று உள்ளதாகவும், தூய சக்தி என்று சொன்ன விஜய் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கேட்டு வீடு வீடாக செல்வது போல் கட்சி அலுவலகங்களுக்கு சென்று ஆட்சி அமைத்ததாக தெரிவித்தார்.
விசித்திரமான பொருந்தாத ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடைபெற்று வருவதாகவும், ஆட்சி சென்று விடும் என்ற பயத்தில் தான் பல வேலைகளை அரசு செய்து வருவதாகவும், அப்பட்டமான சுயநலத்தை தவிர வேறு எதுவும் இல்லாமல் தங்களின் சுயலாபத்திற்காக அதிமுகவை விட்டு தமிழக வெற்றி கழகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சேர்ந்து வருவதாக கூறினார். கட்சியின் நிலைப்பாட்டை மீறி ஆளுங்கட்சிக்கு ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்கள் திரும்பி வந்து அதிமுகவில் சேர விரும்பினாலும் அதைப்பற்றி நான் எடப்பாடி பழனிச்சாமி இடம் பேச தயார் என கூறினார்.

அதிமுகவை விட்டு சென்றவர்களின் பெயர்கள் வரும் காலங்களில் கருப்பு எழுத்துக்களால் பொறிக்கப்படும் என தெரிவித்த அவர் மதிமுக பொதுசெயலாளர் வைகோ திமுகவை முதுகில் குத்தியுள்ளதாகவும் வயதான காலத்தில் வைகோ தடுமாறி வருவதாகவும் விமர்சனம் செய்தார்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே குதிரை பேரம் நடந்துள்ளது என்று நான் தான் கூறினேன் என தெரிவித்தவர், எங்கள் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் இடம் திருட்டுத்தனமாக ஆதரவு பெற்று முதல் ஆதரவு பெற்றதாகவும் அப்போது நான் கூறுகிறேன் குதிரை பேரத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்தான் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றார்.
திமுக கூட்டணியின் இரவல் ஆதரவில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருவதாகவும் தமிழக வெற்றி கழகம் ஒன்றும் தூய சக்தி கிடையாது. அது ஒரு நாச சக்தி என விமர்சனம் செய்த டிடிவி, ஊழல் வழக்கு உள்ள முன்னாள் அமைச்சர்களை கட்சியில் சேர்த்து எப்படி அவர்கள் தூய சக்தி என்று சொல்வதாக கேள்வி எழுப்பியதோடு அமைச்சர் சரத்குமார் இடம் விஜையே தோல்வியடைந்து விட்டதாகவும், வெள்ளை பவுடர் அமைச்சர் விவாகரத்தில் காவல்துறை என்ன செய்ய போகிறது என்று பார்க்கலாம் என தெரிவித்தார்.
அரசியலில் இருந்து திமுக தலைவர் விலக வேண்டும் என அமைச்சர் நிர்மல் குமார் கூறிய கருத்துக்கு பதில் அளித்த டிடிவி தினகரன்,
50 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினை பார்த்து அரசியலை விட்டு விலக வேண்டும் என சின்னப் பையன் நிர்மல் குமார் பேசுகிறார். அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான். அது போல தான் தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் எவ்வளவு பேசட்டுமோ பேசட்டும் என்றார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.