செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் புகை மது மற்றும் போதை பொருட்களுக்கு எதிராக பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் விழிப்புணர்வு மாராத்தான் நடைபெற்றது. 

சென்னை இசிஆர் சாலை பாலவாக்கம் கடற்கரை முற்றத்தில் காலை 7 மணி அளவில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் முகமது கனி தலைமை வகித்தார். இதில் மாணவர்கள் இளைஞர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் மழை என்றும் பாராமல் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மராத்தான் நிகழ்ச்சியை கொடி அசைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொருளாளர் காஞ்சி. A. இப்ராஹீம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். 

இந்த நிகழ்ச்சியில் பாலவாக்கம் கிளை செயலாளர் அப்துல் காதர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இஸ்மாயில், அன்சாரி முஜீப், காதர் அஜீஸ், சம்சுதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். போதை இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கும் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மராத்தான் போட்டி நடைபெற்றது.

Related

“தமிழ்நாடு செல்போன் சங்கம் சார்பில் பொன்னேரியில் ரத்ததான முகாம்!”