தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த  விசிக தலைவரும் மக்களவை எம்.பியுமான தொல். திருமாவளவன்  சமூகவலைதளத்தில் பரவும் வதந்தி எனக் குறிப்பிட்டார். 

அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து அவரே எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை; சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. இதுகுறித்து முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தது குறித்து கேள்விக்கு, அதற்கு ஆதவ் அர்ஜுனாதான் பதிலளிக்க வேண்டும் என்றார்.

மேலும், சென்னையில் பெய்த மழையின்போது தவெக அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், அரசியலுக்குப் புதியவர்களாக இருந்தாலும் தங்களது சக்திக்கு ஏற்பப் போராடி மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். 

தவெக அரசின் நடவடிக்கைகளைப் பொதுமக்கள் வரவேற்றுப் பாராட்டி வருவதாகவும் கூறினார். எடப்பாடி பழனிசாமி தவெக அரசு குறித்து விமர்சிப்பது தொடர்பான கேள்விக்கு, அதற்குத் தவெக தரப்பினர் பதிலளிப்பார்கள் என்று தொல். திருமாவளவன் பதிலளித்தார்.

Related

“தமிழ்நாடு செல்போன் சங்கம் சார்பில் பொன்னேரியில் ரத்ததான முகாம்!”