சென்னை: வருகின்ற மாநகராட்சி தேர்தலில் நடக்கும் ஆட்சி மாற்றமே மக்கள் எழுச்சியின் சாட்சியாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜரின் வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் மஞ்சுப்பிரியா மாரிசாமி தலைமையில், 500-க்கும் மேற்பட்டோர் தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் முன்னிலையில் புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைந்தனர். பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் சரத்குமார், தாம்பரம் மாநகராட்சியில் மக்கள் பிரச்சனையை சரி செய்ய முடியவில்லை கவுன்சிலர்கள் அரசியல் அதிகமாக உள்ளது.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளராக முதல் அமைச்சர் யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய தொண்டர்கள் முழுவீச்சில் பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார். இந்த இணைப்பு விழாவில் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 500-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கட்சியில் இணைந்தது குறிப்பிடத் தக்கது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.