தாம்பரம் அருகே இரவில் வீட்டின் சுவர் மீது எகிற குதித்து உள்ளே சென்ற மனநலம் பாதிக்கபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் பிடித்து கொடுத்த மனநலம் பாதிக்கபட்டவரை மீண்டும் சாலையில் விட்டு சென்ற போலீசாரால் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த சுதாநந்தா பாரதியார் தெருவில் உள்ள வீடு ஒன்றில் சுற்று சுவரை ஏறி மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் குதித்துள்ளார்.இதனை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக கூச்சலிட்டு அந்த மர்ம நபரை பிடித்து சேலையூர் போலீசருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் மர்ம நபரிடம் விசாரணை செய்த போது சரி வர பரிலளிக்காமல் இருந்துள்ளார். இதனால் அவர் மனநலம் பாதிக்கபட்டவர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது, மேலும் அவரை மீட்ட போலீசார் காப்பக்கதிற்க்கு அழைத்து செல்லாமல் மீண்டும் சாலையிலே விட்டுவிட்டு சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபரால் மீண்டும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதற்கு முன்பாக தகுந்த காப்பகத்திற்க்கு கொண்டு செல்ல போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.