சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் ஷாஜகான் பேட்டி : 17 ஆவது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்றைய தினம் ஆளுநர் உரையுடன் சிறப்பான முறையில் தொடங்கியிருக்கிறது.

ஆளுநர் உரையில் இந்த ஆட்சி எந்த திசையை நோக்கி பயணிக்கிறது என்ற குறிப்புகள் அடங்கியுள்ளது. ஆதிச்சநல்லூர்  முதல் ஏஐ தொழில்நுட்பம் வரை வளர்ச்சி முறை  அந்த உரையில் இடம்பெற்றுள்ளது .வரக்கூடிய நிதிநிலை அறிக்கையில் தமிழக மக்கள் திருப்தி அளிக்கக்கூடிய பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம் பெற உள்ளது.  வெற்றி தமிழகம் என்று அறிவிப்பு இடம் பெற உள்ளது.

மேகதாது அணை விவகாரத் தொடர்பாக  அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். மேகதாது அணையில் கர்நாடகா அணை கட்டக்கூடாது. அனைவரும் உறுதியோடு இருக்கிறோம். அதற்கு அரசுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். உறுப்பினர்கள் எடுத்து உள்ள கேள்விகளுக்கு வரக்கூடிய நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மை அமைச்சர் என்ற முறையில் சிறந்த பதில் அளிக்கப்படும்.

சட்டமன்றத்தை தமிழ் தாய் வாழ்த்து  முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மத்திய அரசு அறிக்கையின் அடிப்படையில் தேசிய கீதம் பாடுபட்டது என்றார். மதச்சார்பின்மை  காக்கும் அரசாக அந்த உரையில் இடம் பெற்றுள்ளது. வக்ப் போர்டு சட்ட திருத்தத்திற்கு  சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

Related

“ஆளுநர் உரைக்கும் அட்லிக்கும் என்ன சம்பந்தம்: சட்டப்பேரவையில் காரசார விவாதம்!”