மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் செய்தி:
இஸ்லாமிய இன்னிசைப் பாடகர் முகவை சீனி முஹம்மது உடல்நல குறைவினால் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். "இந்தியா எங்கள் தாய்நாடு" என்ற பாடலின் மூலம் உலக மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்து அன்றைய "மருதநாயகம்" முதல் இன்றைய" ஜனநாயகம் தானா" வரை எத்தனையோ ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர்.
நாகூர் அனிபாவிற்கு அடுத்த நிலையில் அனைவரும் அறிந்த இஸ்லாமிய பாடகராக திகழ்ந்தவர். நாகூர் அனிபா அவர்கள் இவரை அழைத்து நாகூரிலேயே இசைக் கச்சேரி நடத்த வாய்ப்பு தந்தார் என்பது இவரது புகழுக்கு தக்க சான்றாகும். என்னை போல் பாட பலரும் முயன்றுள்ளனர். ஆனால் என்னை போல் படுபவர் சீனி முஹம்மதே என்று அவரை பாரட்டினார் இசைமுரசு இ எம் ஹனிபா.
சீனி முஹம்மதை பிரிந்து வாடும் அவரது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.