சென்னை:
குதிரை பேர புகாரின் பேரில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம் என்று திமுக அமைப்புச்செயலர் ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
தவெக அரசின் குதிரைபேர ஊழல் பற்றி திமுக சார்பில் ஆளுநரிடம் மீண்டும் புகார் அளிக்கபட்டது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், கரூரில் முதல்வர் விஜய் பேசியது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டல் படி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழுவிடமும், சிபிஐயிடமும் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல்வர் விஜய் குதிரைபேர ஊழல் ஈடுபட்டு உள்ளார் என்பதை வைகோ அளித்த வாக்குமூலம் அடிப்படையில் ஏற்கனவே கடந்த 4 ஆம் தேதி ஆளுநரை சந்தித்து ஆதாரத்தோடு புகார் அளித்தோம்.
அதேபோல விஜய பாஸ்கரும் வெளிப்படையாகவே செய்தியாளர் கூட்டத்திலே என்னை தவெக வில் வந்து சேரும்படி கேட்டுக் கொண்டார்கள் ஆகவேதான் நான் ராஜினாமா செய்கிறேன் என்று சொல்லி எம். எல். ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவரும் சேர்ந்துவிட்டார்.
ஆக இதெல்லாம் குதிரைபேர ஊழலுக்கு தகுந்த ஆதாரங்கள் என்பதை சுட்டிக்காட்டி ஆளுநரிடத்தில் இன்று மீண்டும் ஒருமுறை திமுகவின் சார்பில் புகார் கொடுத்திருக்கிறோம். விஜய் பேசும் போது கொத்து பரோட்ட என்றெல்லாம் கொச்சையாக பேசுகிறார்.
கரூர் விஜய பாஸ்கர், விராலிமலை விஜயபஸ்கர் ஆகிய இருவருமே நாங்கள் சாப்பிட்டுப் போட்ட இரண்டு இலை தான் அதை தவெக வில் இணைத்துக் கொண்டுள்ளனர் என அதிமுகவினரே விமர்சித்து உள்ளனர். அதில் ஏற்கெனவே வெளியிட்ட கரூர் அறநிலையத்துறை நிலம் தொடர்பான அரசாணையை ஏதோ இவரிடம் கோரிக்கை வைத்து அதன் பிறகு வெளியிடுவது போல ஒரு நாடகத்தை நடத்தி காட்டியுள்ளார். இந்த நாடகம் நடந்தது 10 ஆம் தேதி ஆனா 9 ஆம் தேதியே அதற்கான அரசாணை போடப்பட்டுவிட்டது.
இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் எவ்வளவு பெரிய நாடகம். ஆக இப்படிப்பட்ட நாடகங்களை இவர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவுகட்டுகிற வகையில் திமுக நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். குதிரை பேர புகாரின் பேரில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.