சென்னை தண்டையார் பேட்டை யில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு நூலகத்திற்கு  விடுதலை போராட்ட வீரர் நல்லக்கண்ணு பெயரை சூட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர் எட்வர்ட் ராஜா பிறந்தநாள் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராயபுரம் ரவுண்டப் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் சமூக ஆர்வலர் எட்வர்ட் ராஜா சமையல் கலைஞர் ருக்மாங்கதன் ஆகியோரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சென்னை  தண்டையார்பேட்டை பேட்டையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு முன்னாள் கவுன்சிலர் மு. சம்பத் தலைமை தாங்கினார்.  தூய ஆரோக்கிய நாதர் ஆலயத்தின் பங்குதந்தை ஜேம்ஸ் அருள் தாஸ், முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் வடசென்னை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி. ராபர்ட், சென்னை பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் முனைவர் சுந்தர், மு. ராமச்சந்திரன், எஸ். எஸ். ஜெயமோகன், பன்னீர்செல்வம் பிரதர்ஸ் அறக்கட்டளை இயக்குனர் அந்தோணி நெப்போலியன், ராயபுரம் ரவுண்டப் மக்கள் இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் எல் முருகவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை தண்டையார்பேட்டையில் சமூக ஆர்வலர் எட்வர்ட் ராஜா சமையல் கலைஞர் ருக்மாங்கதன் ஆகியோரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிந் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் ஜெய்சங்கர்,  ஆம் ஆத்மி கட்சி மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளர் சோபியா, பீமா ராவ் அம்பேத்கர் பொதுநல சங்கத்தின் தலைவர் வண்ணை என். குமார், குடியரசு கட்சி மாவட்ட செயலாளர் டி. ஆர். பசூல், பட்டினத்தார் அறக்கட்டளை நிறுவனர் பி. வரதராஜன், நேதாஜி சமுக நல அறக்கட்டளை பொது செயலாளர் வன்னிய ராஜன், அம்மையப்பர் அறக்கட்டளை தலைவர் ஏசிஎல் சீனிவாசன்  உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முனைவர் தண்டபாணி சிறப்பாக தொகுத்தளித்தார். இந்த விழாவில் தண்டையார்பேட்டையில் புதிதாக திறக்கப்பட விருக்கும் அரசு நூல் நிலையத்திற்கு மறைந்த விடுதலை போராட்ட வீரர் நல்லக்கண்ணுவின் பெயரை சூட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”