இந்தியாவின் இளம் பிரதமர்களில் ஒருவரும், நவீன தொழில்நுட்ப வளர்சிக்கு வித்திட்டவருமான முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ்காந்தியின் 82 வது பிறந்தநாள் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி வீர் பூமி முதல் தமிழகம் வரை பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட இடமான காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவிடம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு வழிபாட்டுத் தலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நினைவிட வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் . விஸ்வநாதன், ராஜீவ்காந்தியின் திருவுருவ படத்திற்கு முதலில் மலர் வளையம் வைத்தார். பின்னர் மலர் தூவி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அருள்ராஜ் தலைமையில் வட்டாரத் தலைவர் நிக்கோலஸ் சீனிவாச ராகவன் காஞ்சிபுரம் மாநகர பகுதி தலைவர் சப்தகிரி மாங்காடு நகர தலைவர் கோபி ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக நினைவிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.