செய்தித்துறை மற்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், வடக்கிழக்குப் பருவ மழையை முன்னிட்டு சென்னை பெருநகர மாநகராட்சி 5வது மண்டலத்திற்கு உட்பட்ட அழகாப்பா சாலை, ஜோதி வெங்கடாசலம் சாலை ஆகிய பகுதிகளில் தாழ்வாக இருந்த மரங்கள் அப்புறப்படுத்தும் பணிகளையும், 100குதிரை திறன் கொண்ட நீர் உறிஞ்சி மோட்டார்கள் மூலம் கழிவுநீர் கால்வாய்களில் மழை நீர் அப்புறப்படுத்தப் படுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது வடக்கு மாநகர துணை ஆணையர் சுவேதா சுமன்,உதவி ஆணையர் சத்தியநாராயணன், செய்ற்பொறியாளர்கள் நக்கீரன், முருகவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.