சென்னை: கடந்த மே 13 ம் தேதி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் பதவி ஏற்பு விழாவுக்கு சென்றிருந்த நான், ஆளுநர் மாளிகையிலேயே தவறி விழுந்து விட்டேன். இரண்டாவது முறையாக எனது வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மயக்கநிலையில் இருந்த நான் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து சென்னைக்கு கார் மூலம் வந்து தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்றேன். 

பதவி ஏற்பு முடிந்து எனது தாய்த்தமிழ் நாளிதழை ஆளுநர் கைலாசநாதன் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற விரும்பினேன். அப்போது தான் விபத்து ஏற்பட்டது. நுழைவு வாயிலேயே விழுந்து விட்டேன். ஆனால் எனது நாளிதழை மூத்த செய்தியாளர் மற்றும் ஆசிரியர் மோடி குமார் அவர்கள் ஆளுநரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். ஆளுநர் எனது நாளிதழை படித்த புகைப்படம் எனக்கு தற்போது கிடைத்தது. வலியையும் மறந்து அந்தப் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறேன் பாருங்கள். இதுதான் பத்திரிகை போதை என்பார்கள்... இன்னும் தெளியவில்லை. காலம் உள்ளவரை...

க.செய்யது அப்துல்  கனி, ஆசிரியர் , தாய்த்தமிழ் நாளிதழ்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”