சென்னை: உலக வங்கியிடமிருந்து கடன் பெறுவதை மையமாக கொள்ளாமல் இந்தியர்களின் உழைப்பை மூலதனமாக்கி அவற்றை வெளிநாடுகளில் முதலீடு செய்து அதனால் கிடைக்கும் பொருளாதாரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தொழிலதிபர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் பேட்டி அளித்த அவர் இந்தியாவின் தரத்தை உலக அளவில் உயர்த்துவதற்கும் நமது நாட்டு உற்பத்தியை வெளிநாடுகளில் விற்று அதன்மூலம் கிடைக்கப் பெரும் பொருளாதாரத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் புதிய திட்டத்தையும் அவர் வகுத்துள்ளார்.
பல ஆண்டுகளாக இதற்காக திட்டமிட்டு உழைத்து வரும் மாரிமுத்து, தொழில் முனைவோருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் உலக வர்த்தக அமைப்பில் இடம்பிடித்து இருப்பதுடன், அடுத்த மாதம் செப்டம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜெனிவாவில் நடைபெறும் மூன்று நாள் மாநாட்டிலும் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உலக வங்கியிடமிருந்து கடன் பெறுவதை மையமாக கொள்ளாமல் இந்தியர்களின் உழைப்பை மூலதனமாக்கி அவற்றை வெளிநாடுகளில் முதலீடு செய்து அதனால் கிடைக்கும் பொருளாதாரத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் திட்டத்தை அவர் அறிவித்துள்ளார்.
இதன்மூலம் 24 கோடி பேரை புதிய தொழில் முனைவோர்களாக மாற்ற முடியும் என்றும் இதில் யாருக்கு அதிக ஆர்வம் இருக்கின்றதோ அவர்கள் அனைவரும் முதல் கட்டமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்துக்கான இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் அதன் மூலம் புதிய தொழில் முனைவோராக விரும்புவோர் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தொழிலதிபர் மாரிமுத்து கேட்டுக் கொண்டுள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.