சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தவெக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

 தமிழக அரசு இன்று வெளியிட்ட உத்தரவில், சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடக் மாற்றப்பட்டு, புதிய ஆணையராக அமல்ராஜ் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவர் 1996 ஆம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இதற்கு முன்னதாக இவர் தாம்பரம் மாநகர காவல் ஆணையராக பணியாற்றினார்.

சென்னை பெருநகர ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடக், சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் சென்னை பெருநகர ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் மாற்றப்பட்டு, அபின் தினேஷ் மொடக் தேர்தல் ஆணையத்தால் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

“பள்ளிகளில் காலியாக உள்ள 1800 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும்: அன்புமணி ராமதாஸ்”