சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
சற்று நேரத்துக்கு முன்பாக சென்னை காவல் துறையிலிருந்து உங்களுக்கு செய்தி ஒன்று வெளிவந்திருக்கும். 40 நாட்கள் 40 நாட்களாக நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். திமுகவும் ஸ்டாலின் அவர்களும் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். இன்றைய செய்தி குறிப்பு அதனுடைய வெளிப்பாடு தான் செய்தியாக வெளிவந்துள்ளது.
திமுகவை சேர்ந்த முக்கியமான நபர் செந்தில் பாலாஜி போன்றவர்கள் ஸ்டாலின் மற்றும் உதயநிதி அவர்களுடைய உத்தரவின் பேரில் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து 10 கோடி ரூபாய் தருகின்றோம். 20 கோடி ரூபாய் தருகிறோம் என்று எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை கடந்த 40 நாட்களாக தொடர்பு கொண்டு வருகின்றனர்.
நாங்கள் கண்டிப்பாக இதனை சட்டபுர்வமாக நடவடிக்கை எடுப்போம். எங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவர்களிடம் பேசுகையில் அவர்களை தொடர்ந்து தொடர்பு கொண்டு மிரட்டும் தோரணையில் பேசி வருகின்றனர். எங்கள் சட்டமன்ற உறுப்பினர் கொடுத்த புகாரின் பெயரில் மிரட்டியவர் தற்பொழுது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குதிரை பேரத்தில் யாரெல்லாம் ஈடுபட்டார்களோ அவர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது.
குறிப்பாக நரேஷ் மற்றும் தியாகராஜன் என்ற இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நரேஷ் என்பவர் செந்தில் பாலாஜியுடன் நேரடி தொடர்பில் இருப்பவர். இதை போன்ற பணிகளை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் செந்தில் பாலாஜி போன்ற நபர்களை பயன்படுத்தி 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசும் போக்கினை முழு நேரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்து வருகிறேன் கூட்டத்தொடரில் சபாநாயகர் மீது வைக்கப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என பேரம் பேசி உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு நபர்கள் புகார் அளித்துள்ளனர்.
லட்சக்கணக்கான கோடி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் கொள்ளையடித்து விட்டு எப்படியாவது சட்டமன்ற உறுப்பினர்களை வாங்கி விடலாம் என்று முயற்சி செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி எப்படியாவது குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று இவர்களுடன் இணைந்து செயல்படுகிறார். இதை இது போன்ற கீழ்த்தனமான செயல்களில் யாரெல்லாம் ஈடுபடுகிறார்களோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டபூர்வமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நேரடியாக செந்தில் பாலாஜியுடன் பயணிப்பவர்கள் அவருடைய கரூர் நிறுவனத்தில் யாரெல்லாம் பணிபுரிந்து இருக்கிறார்களோ மற்றும் அவருடைய கரூர் கேங் நபர்கள் மீது நடவடிக்கை சட்டபூர்வமாக எடுக்கப்படும். இது மாதிரியான குதிரை பேரத்தினை நிறுத்த வேண்டும், இது போன்ற குதிரை பேரத்தில் ஈடுபட்டு விட்டு மறுபக்கம் எங்கள் மீது புகார்களை தெரிவிக்கும் ஸ்டாலினுக்கு சிறிதளவும் வெட்கம் இல்லையா?
இதற்கு தான் மக்கள் உங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளனர். உங்களுடன் பயணித்த கூட்டணி கட்சிகள் உங்களை விட்டு வெளிவந்து விட்டனர். இந்தக் குதிரை பேரத்தில் கூட வெற்றி பெற முடியாமல் இருக்கிறார் ஸ்டாலின். தற்பொழுது செந்தில் பாலாஜியின் நெருங்கிய நபர் கைதாகி உள்ளதால் செந்தில் பாலாஜி தொடர்பான குற்றங்கள் நமக்கு வெளி வருகிறது. ஆனால் இதைப் போன்று எத்தனை பேர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என யாருக்கு தெரியும்.
ஸ்டாலின் அவர்கள் இதனை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மாவட்ட செயலாளர்கள் போல் ஒரு தொகுதிக்கு 200 கோடி ஆயிரம் கோடி என்று நாங்கள் செலவழிக்கவில்லை. எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெறும் மூன்று அல்லது நான்கு லட்சம் ரூபாய் மட்டுமே செலவழித்தனர். அடுத்த தேர்தலிலும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படி தான் வெற்றி பெறுவார்கள்.
மக்கள் அனைவரும் எங்கள் மீது 100 சதவீதம் நம்பிக்கை வைத்துக்கொண்டு வாக்களித்துள்ளனர். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். இன்று அல்லது நாளை தேர்தல் வந்தாலும் அதில் நாங்கள் சந்தித்து நாங்களே வெற்றி பெறுவோம். திராவிட கழகம் ஆட்சியில் கடந்த ஐந்து வருடமாக மக்களுக்கு செய்த அநீதிகள் மற்றும் தீங்கின் காரணமாகவே நீங்கள் தேர்தலில் தோல்வி அடைந்தீர்கள். அதனை உணர்ந்து கொண்டு அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் செந்தில் பாலாஜி. உங்களை போல் இதுவரை முதலமைச்சர் வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் தோல்வியடைந்தது கிடையாது. இதுதான் மக்கள் உங்களுக்கு கொடுத்த பாடம்.
ஸ்டாலின் அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் அல்லது நீங்கள் முன்பாக முடிவு செய்தது போல் திமுக அதிமுக இணைந்து பாரதிய ஜனதா கட்சியிடம் சேர்ந்து அரசியல் ஆதாயத்தை தேடி சொல்லுங்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் குதிரை பேரம் பேசும் நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிந்தவுடன் ஆளுநருக்கு ஏன் கடிதம் எழுத வேண்டும் தன் நபர்கள் இல்லை என்று ஆதாரத்தை மட்டும் காட்ட வேண்டியது தானே.
திமுக அதிமுக இடையே கூட்டணி என்ற பேச்சுவார்த்தையின் காரணமாகவே கூட்டணி கட்சிகள் வெளியேறினர். அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளில் யாருக்கும் அரசியல் எதிர்காலம் இல்லை. ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருப்பது சிறிய காரியம் கிடையாது. மக்களை சந்திக்க விடாமல் செய்தது ஸ்டாலின் மற்றும் எடப்பாடி ஆகிய இருவர் மட்டுமே அதன் காரணமாகவே இரு கட்சிகளில் இருந்து வெளியேறி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து கொள்கின்றனர்.
எடப்பாடி முதல்வர் ஆக்குவதற்கு முயற்சிக்கிறோம் என ஸ்டாலின் கூறினால் எந்த கூட்டணி கட்சிகள் அவருடன் பயணிக்க தயாராக இருப்பார்கள்.மு க ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு எந்த வேலையும் பார்க்காமல் எப்படியாவது பொறுப்பினை பணம் கொடுத்து வாங்கி விட வேண்டும் என இந்த செயல்களில் ஈடுபட்டு வருகின்றார். எப்படியாவது குறுக்கு புதியில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியும் என்று நினைத்தால் அது முடியாது.
உங்கள் ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் உங்கள் மகனை வைத்து பயிற்சி மேற்கொண்டீர்கள். அரசியலுக்கு அது வெற்றி பெற முடியவில்லை இன்று அவர் துபாயில் இருக்கிறார். முதலில் உங்கள் மகனுக்கு அரசியல் பயிற்சி தாருங்கள். நீங்களே கடைசி வரை அரசியல்வாதியாக ஆக முடியவில்லை.
இன்னைக்காவது ஸ்டாலின் தலைமையிலான அரசு என்று சொல்லி இருக்கிறாரா திராவிட மாடல் அரசு என்றுதான் சொல்லி இருக்கின்றார். ஏனென்றால் அவருக்கே அந்த தைரியம் கடைசி வரை வரவில்லை. இப்போதும் நாங்கள் சொல்கின்றோம் திமுகவுடைய அத்தியாயம் இத்துடன் முடிவடைந்துவிட்டது. இன்றைக்கு அதிமுகவுடன் சேர்ந்து பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் என்று எண்ணம் வந்ததோ அன்றே திமுக உடைய அத்தியாயம் முடிவடைந்துவிட்டது.
வைகோ அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் நீங்கள் ராஜினாமா செய்தால் நானே உங்களுக்கு பிரச்சாரம் செய்கிறேன் என்று முதலமைச்சர் திரிவதாக சொல்லி இருக்கிறார் என்ற கேள்விக்கு, வைகோ அவர்கள் சொன்னது என்னவென்றால் நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணிக்க ஆசைப்படுகிறோம். இங்கு யாரையும் இழுக்கவில்லை அவர்களும் எங்களோடு சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். யார் எங்களுடன் இணைக்க வேண்டுமோ சட்டபூர்வமாக ஏனென்றால் அவர்கள் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் உதய சூரியன் சின்னத்தில் போட்டிட்டு வெற்றி பெற்றதால் அவர்கள் எப்படி எங்களுடன் பயணிக்க முடியும் அந்த சட்டமன்ற உறுப்பினர் முடிவெடுக்க வேண்டும் அந்த கட்சி முடிவு எடுக்க வேண்டும். அதிமுகவிலிருந்து உணர்ச்சிவசப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் பதவி ராஜினாமா செய்கிறார்கள் இது ஒரே நாளில் நடைபெற்ற வில்லை 27 பேர் வெளியே சென்றார்கள் எதற்காக வெளியே சென்றார்கள்.
உணர்ச்சிவசப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எங்களை சந்திக்க வருகிறார்கள். அவர்களை ஆதரவு படுத்தி நாங்கள் பேசுகின்றோம். ஏனென்றால் எடப்பாடி ஏமாற்றி விட்டார் ஸ்டாலின் ஏமாற்றிவிட்டார் அவர்கள் ஓட்டு போட்ட மக்களை போய் சந்திக்க முடியுமா. ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்வது சாதாரணமான விஷயம் அல்ல ஒரு மாத காலம் அதற்காக கஷ்டப்பட வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் பதவி ராஜினாமா செய்து வரவர்களை ஆசுவாசப்படுத்தி சமாதானம் செய்து நாங்கள் அனுபவிக்கின்றோம். இதுபோன்று பல கட்சிகளில் இருக்கிறார்கள். திமுக அதிமுக போன்ற கட்சியிலும் இருக்கிறார்கள்.
திமுகவில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் வந்து எங்களால் அந்த கட்சியில் பயணிக்க முடியவில்லை அது கட்சியே இல்லை அது குடும்ப பின்னணியில் உள்ளது. முன்னதாக கலைஞருடைய தலைமையில் இருந்த போது நன்றாக இருந்தது. இப்போது அதுவும் இல்லாமல் ஒரே குடும்பம் ஸ்டாலின் குடும்பமாக திமுக மாறிவிட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் யாரையும் சட்டமன்ற உறுப்பினர் பதவி ராஜினாமா செய்யுங்கள் என்று சொல்லவில்லை அவர்களாகவே வந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
வைகோ அவர்கள் திமுகவுடன் பயணிக்க முடியவில்லை என்று எங்களிடம் தெரிவித்தார் .சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யாதது தனிப்பட்ட முடிவு அது. நாங்கள் எந்த விதத்திலும் நாங்கள் இதை தருவோம் அதை தருவோம் என்று சொல்லி பேரம் பேசியது கிடையாது. சி விஜயபாஸ்கர் குட்கா வழக்கு மற்றும் வரக்கூடியவர்கள் பேரில் வழக்குகள் இருக்கிறது அதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு,
யார் யார் மீது வழக்குகள் இருக்கிறதோ அவர்கள் தனிநபராக சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் வந்து சேர்கிறார்கள். ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் கட்சியில் வந்து சேர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் வருவதால் அவர்கள் மீது இருக்கிற வழக்குகள் நிறுத்தப்படுமா என்பது தெரியவில்லை. அவர்கள் மீது இருக்கிற வழக்கு எந்த சமசரமும் கிடையாது. ஒழுங்கான முறையில் நடைபெறும்.
கண்டிப்பாக சட்டபூர்வமான என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது நிச்சயம் தொடரும். நாங்கள் யாரையும் ஆதரிக்கவில்லை விஜயபாஸ்கர் மட்டும் நாளை கட்சியில் இணைவதில்லை அவருடன் 40 மாவட்ட செயலாளர் எங்கள் கட்சியில் இணைய உள்ளார்கள். ஒருவர் மீது என்ன வழக்கு இருக்கிறது என்று தெரியாது அது நிச்சயமாக அவர்கள் மீது இருக்கக்கூடிய வழக்கு நடவடிக்கை தொடரும் என்றார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.