பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாள் முன்னிட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நங்கநல்லூரில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் கழக கொடி ஏற்றிவைத்தும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் என சுமார் 500 பேருக்கு இனிப்புடன் கூடிய சிற்றுண்டி வழங்கினார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஆலந்தூர் தெற்கு பகுதி, 167 வது வட்ட திமுக சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. 167 வது மாமன்ற உறுப்பினர் துர்காதேவி நடராஜன் மற்றும் வட்ட செயலாளர் ஜெ.நடராஜன் ஆகியோர் ஏற்ப்பாட்டில் 12 வது மண்டலகுழு தலைவரும் ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளருமான என்.சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. நங்கநல்லூர், ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு கழக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாலை அணிவித்து அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவியும் கழக இருவண்ண கொடியை ஏற்றிவைத்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., வி.என்.பி.வெங்கட்ராமன், பொதுகுழு உறுப்பினர் எம்.எஸ்.கே.இப்ராகிம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ், மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் சாய் ஜெயகாந்த்பாரதி, மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் ஆர்.ஆர்.ஜெயராம் மார்த்தாண்டன், வட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.