சென்னை, ஆக.18-
பட்டியலின தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டிய கடமை இருக்கிறது. சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு பஞ்சமி நிலத்தை மீட்டு கொடுப்பார் என நம்புகிறோம் என மத்திய மாநில எஸ்.சி, எஸ்.டி. அரசு ஊழியர்கள் மாநில அமைப்பாளர் கருப்பையா தெரிவித்தார்.
சென்னை எழிலகத்தில் மத்திய மாநில எஸ்.சி, எஸ்.டி. அரசு ஊழியர்களின் நிர்வாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் நிறுவனரும் , மாநில அமைப்பாளருமான கருப்பையா தலைமை தாங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருப்பையா : பட்டியல் பழங்குடியின மக்களுக்கு, அமைச்சர் பதவி வழங்கியது பாராட்டுக்குரியது. இருப்பினும் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்று எதிர் கட்சி தலைவர்கள் கூறியது போல பழங்குடி பட்டியல் பழங்குடியின மக்களுக்கு எந்த ஒரு நலத்திட்டத்தையும் முதலமைச்சர் அறிவிக்கவில்லை. அதற்கான எந்த ஒரு முயற்சியும் அவர் எடுக்கவில்லை.
ஏற்கனவே நடந்து முடிந்த நிதிநிலை அறிக்கையில், பட்டியலின மக்களுக்காக நிதி ஒதுக்குவார் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் எந்தவிதமான அறிக்கையும் வெளியிடவில்லை. ஏற்கனவே பட்டியலின துறையில் பணியாற்றுகின்ற அரசு ஊழியர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் படி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று அறிவிப்பு உள்ளது.
19 சதவீதம் அரசு துறையில் பட்டியலின மக்கள் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று அரசுத்துறை கூறுகிறது. கடந்த திமுக , அதிமுக ஆட்சியில் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது முதலமைச்சராக பதவி வகித்துள்ளவர் இதனை நடத்தி தருவார் என்று நம்புகிறோம். தமிழகத்தில் , கடந்த ஆண்டுகளில் ஆட்சி செய்த திமுகவும் அதிமுகவும் பட்டியலின பழங்குடியின மக்களுக்காக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. வெறும் பேப்பர் அறிக்கையாக மட்டுமே உள்ளது. தற்போது உள்ள தமிழக முதலமைச்சர் விஜயை நாங்கள் மக்கள் அனைவரும் தேர்ந்தெடுத்து உள்ளோம். அவரும் எங்களை தேர்ந்தெடுத்து எங்களுக்கான நலத்திட்டங்களை வழங்குவார் என்று முழுமையாக நம்புகிறோம்.
கடந்த ஆட்சியில் திமுகவும் அதிமுகவும் அறிக்கைகளை வெறும் பேப்பர் அறிக்கையாக மட்டுமே விட்டு சென்றனர். தற்போதும் சூழ்நிலைகள் மாறாமல் தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் , இளைஞர்களின் மரணம், டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக கூறிவிட்டு டாஸ்மாக் கடைகளை ஒரு சில இடங்களில் மட்டும் மூடி வீட்டு மற்ற இடங்களில் இயங்குவது எவ்விதத்தில் போதை ஒழிப்பு ஆகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகியும் எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லை என்றார்.
இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் அகத்தியன் சங்க ஒருங்கிணைப்பாளர் பேசியதாவது : திமுக அதிமுகவை போலவே தற்பொழுது தவெக அரசும் நடத்தி வருகிறது. பட்டியலின பழங்குடியின மக்களுக்கான அறிவிப்புகள் எதுவும் வெளியிடவில்லை. அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
80 வது சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு கை அசைத்து நடந்து சென்றது போல் பிறகு மாநில அரசும் இதனை கடந்து செல்கிறார்கள். வருமான வரி தொகையில் OBC / BC சமூகத்தை எனக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் , SC / ST போன்ற சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கான தொகை 2 லட்சம் மட்டுமே உள்ளது. இவ்வாறு பட்டியல் இன மக்களுக்கு மிகவும் குறைவாக உள்ளது. எங்கள் இன மக்கள் படிப்பதே பெரிது. படித்து வெளியில் வேலைக்கு செல்வது அதைவிட அரிது. மிக சிறிய தொகையை அளிப்பது ஏற்கத்தக்கது அல்ல. இவர்களுக்கு தொகை அதிகரித்து தமிழக அரசுதான் ஊக்குவிக்க வேண்டும். ஆனால் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது ஒரு கண்ணில் நெய்யும், ஒரு கண்ணில் வெண்ணையும் வைப்பது போல் உள்ளது என்றார்

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.