செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மெகா வேலைவாய்ப்பு முகாம் – INSPIRE 2026 நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சுப்பையா பாரதி, TATTI நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (COO) ஜோஷுவா ஜெரார்டு, ASSIST நிறுவனத்தின் இந்திய நாட்டுத் தலைவர் கரண் கலிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக, தமிழ்நாடு அரசின் மாநிலத் தகவல் ஆணையர் முனைவர் பிரதாப் குமார் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 60 நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும், 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டனர்.

இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இத்தகைய நிகழ்வுகள் பெரும் பங்காற்றுகின்றன.

இளைஞர்களின் திறமைக்கு வாய்ப்பு மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்திருந்தது.

Related

“தமிழ்நாடு செல்போன் சங்கம் சார்பில் பொன்னேரியில் ரத்ததான முகாம்!”