விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, சென்னை வேளச்சேரியில் உள்ள குழந்தைகள் பள்ளியில் ஏராளமான மழலைச் செல்வங்கள் உற்சாகத்துடன் தங்களது முதல் நாள் பள்ளிப் பயணத்தைத் தொடங்கினர்.
இதையொட்டி, பள்ளியில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பூஜைகள் நிறைவடைந்த பின்னர், தட்டில் வைக்கப்பட்டிருந்த அரிசி, நெல் உள்ளிட்ட தானியங்களில் தமிழின் முதல் எழுத்தான ‘அ’ எழுதி, குழந்தைகள் தங்களது கல்விப் பயணத்தை இனிதே தொடங்கினர்.
குழந்தைகளின் இந்த முதல் எழுத்து நிகழ்வில் பெற்றோர்களும் உடனிருந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். மழலைச் செல்வங்களின் பள்ளி வாழ்க்கையின் முதல் நாளை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடினர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகளில் ஒருவரான ஆரோன் அதீதன், தனது கல்விப் பயணத்தின் முதல் அடியை எடுத்து வைத்தார். விஜயதசமி நாளில் எழுத்தறிவைத் தொடங்கிய குழந்தைகளுக்கு பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்தினரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.