சென்னை: சென்னை  விமான நிலையத்திற்கு புனித ஹஜ் பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பியவர்களை தவெக எம்.எல்.ஏ., முஸ்தபா வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் முஸ்தபா கூறுகையில், 

தமிழக்த்தில் இருந்து 6363 பேர் ஹஜ் பயணத்திற்கு சென்று இருந்தார்கள். கடந்த ஆட்சியில் ரூ.25 ஆயிரம் மான்யமாக வழங்கப்பட்டது. வரும் ஆண்டில் ரூ.50 ஆயிரம் மான்யமாக வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைப்போம். தென் தமிழக பகுதியில் இருந்து வரும் ஹஜ் பயணிகள் தங்குவதற்காக இல்லம் விரைவில் கட்டி முடிக்கப்படும். கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் ஹஜ் பயணித்திற்கு செல்கின்றனர். கடந்த ஆட்சியாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தவில்லை. வரும் காலங்களில் மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து எண்ணிக்கையை உயர்த்தப்படும். 

ஹஜ் பயணத்திற்கு அதிக அளவில் எண்ணிக்கை இருந்ததால் பிற மாவட்டங்களில் இருந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆட்சிக்கு வந்த 30 தினம் தான் ஆகிறது. 717 மதுபானங்களை மூட உத்தரவிட்டார். சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related

“கிராமப் பகுதிகளில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் பாதுகாப்பு விழிப்புணர்வு!”