சென்னை : சோழிங்கநல்லூர் முகமது சதக் கலை அறிவியல் கல்லூரியில் 08.07.2026 அன்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

 விழாவுக்கு முகமது சதக் கலை அறிவியல் கல்லூரியின் இயக்குனர் எஸ்.எம்.ஏ.ஜே. அப்துல் ஹலீம் தலைமையேற்று தலைமை உரையாற்றினார். விழாவிற்கு பட்டிமன்ற பேச்சாளரும் திருச்சி தேசியக் கல்லூரின் தமிழ்த்துறை இணை பேராசிரியருமான முனைவர் சா. நீலகண்டன்  சிறப்பு விருந்தினரான கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் எம்.எஸ். முகமது ஜாபீர், துணை முதல்வர் முனைவர் எம். செய்யது அலி, நிர்வாக அலுவலர் கே. இராகவேந்திரன், அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் முதலாமாண்டு மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”