மாநில நெடுஞ்சாலை வழிகாட்டிப் பலகையில் இந்தி எழுத்து விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு கிளம்பியதும் யூ-டர்ன் அடிக்கும் தவெக அரசின் மற்றுமொரு முயற்சியா இது? என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் ஊரின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருந்தது. மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் இந்தியில் ஊர் பெயர்கள் இருந்ததால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டன. இது குறித்து முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “இதுவரை மத்திய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது. தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் (தவெக) சொன்ன மாற்றம் போல.

எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் தவெக அரசின் மற்றுமொரு முயற்சியா இது?. வடமாநில Influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் தவெக அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன். 

இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்!” என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related

“காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவையில் 157 சைக்கிளிஸ்டுகள் பங்கேற்ற பேரணி ”