சென்னை: பள்ளிகளில் எந்த கட்சியினராக இருந்தாலும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் மேற்கொள்ள தடை உள்ளது என்று கூறிய அமைச்சர், அதையும் மீறி கட்சி சார்ந்த நிகழ்வுகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
பள்ளிகளில் முதலமைச்சர் பிறந்தநாள் நிகழ்ச்சி குறித்து உயர்நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளதற்கு, அரசு சட்டபூர்வமாக பதில் அளிக்கும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.பள்ளிகளில் எந்த சுழலிலும் தேவையின்றி விடுமுறை விட கூடாது என்று கூறிய அமைச்சர் ராஜ்மோகன், காஞ்சிபுரத்தில் மின்வெட்டு காரணம் காட்டி தனியார் பள்ளி விடுமுறை விடப்பட்டதா என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள கூட்ட அரங்கில், தமிழறிஞர் மணவை முஸ்தபா பிறந்தநாளை ஒட்டி நடைபெறும் அறிவியல் தமிழ் புத்தக கண்காட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திறந்து வைத்தார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசுகள் வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் அறிவியல் தமிழ் தந்தை முஸ்தபாவின் பணி என்பது மிகவும் அளப்பரியது என்றும், அவரின் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை வைத்தது என்பது மிகவும் சிறப்புக்குரியது என்று கூறிய அமைச்சர், பல ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்ததை தந்தவர் என்றார்.
மேலும் பள்ளிகளில் எந்த கட்சியினராக இருந்தாலும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் மேற்கொள்ள தடை உள்ளது என்று கூறிய அமைச்சர், அதையும் மீறி கட்சி சார்ந்த நிகழ்வுகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதேபோல் உயர்நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளதற்கு சட்டபூர்வமாக பதில் அளிப்போம் என்றும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அமைச்சர், மின்சார பிரச்சனை என்பதை தாண்டி பள்ளிகளில் எந்த சுழலிலும் தேவையின்றி விடுமுறை விட கூடாது என்று கூறினார். காஞ்சிபுரத்தில் மின்வெட்டு காரணம் காட்டி தனியார் பள்ளி விடுமுறை விடப்பட்டதா என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.
அதேபோல் மருத்துவமனைகளில் நோயாளிகளில் பாதிப்படையும் நிகழ்வுகள் ஏதேனும் நடைபெற்றிருந்தால் வருத்தம் தெரிவித்த அமைச்சர், அறிவியல் தமிழ் அறிஞர் முஸ்தபா பிறந்தநாள் நிகழ்ச்சி என்பதால் மருத்துவமனையை விட வேறு பொறுத்தமான இடம் இருக்காது என்பதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று கூறினார். மேலும் நான் வரும் போது நோயாளிகளுக்கு தொந்தரவு தரக்கூடிய எந்த நிகழ்வும் இல்லை என்றும், அது போன்ற நடவடிக்கை இருந்தால், இனி வரும் காலங்களில் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசி அமைச்சர் பள்ளிகளின் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு பனிஷ்மென்ட் என்ற முறையில் சில கடுமையான சம்பவங்கள் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது மாணவர்கள் நமது குழந்தைகள் ஆகையால் மனிதாபிமானத்தோடு மாணவர்களை கையாள வேண்டும் என்றார் மேலும் நீதி மன்றம் மற்றும் அரசன் சார்பில் ஏற்கனவே பள்ளியில் கட்டண பட்டியலை வெளிப்படையாக வைக்க வேண்டும் என கூறியுள்ளோம் படி வைக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தமிழில் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற பல முன்னெடுப்புகள் எடுக்கப்படும் மாணவர்களுக்கு பலபேர் பயிற்சிகள் வழங்கப்படும் என்றார் பெரம்பூரில் மாதவிடாய் காலத்தில் மாணவி ஒருவரை வெளியே நிற்க வைத்த சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் அது வேண்டுமென்று நடைபெற்ற சம்பவம் அல்ல மாணவியின் பெற்றோர்கள் வர தாமதமாகிவிட்டது மாணவி அன்று வீட்டுக்கு செல்வதற்காக காத்திருந்தார் என்றார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.